Home
Gadgets

முரட்டு பிரீமியம்.. LTE சப்போர்ட்.. AMOLED டிஸ்பிளே.. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

ஒரு ஸ்மார்ட்போனுக்கு நிகராக ஈ-சிம் சப்போர்ட், அமோலெட் டிஸ்பிளே, 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களுடன் ஹானர் வாட்ச் 4 ப்ரோ (HONOR Watch 4 Pro) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, விற்பனை விவரங்கள் இதோ.

ஹானர் வாட்ச் 4 ப்ரோ அம்சங்கள் (HONOR Watch 4 Pro Specifications): இந்த ஹானர் ஸ்மார்ட்வாட்ச் 1.75 இன்ச் (464 x 464 பிக்சல்கள்) எல்டிபிஓ (LTPO) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதோடு 310 பிபிஐ (PPI) சப்போர்ட் உள்ளது. இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always On Display) மாடலாகும். இதில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் வருகிறது.

LTE சப்போர்ட்.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

அதற்காக ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் என்பதால், ஈசிம் (e-SIM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹானர் வாட்ச் 4 ப்ரோ மாடலை ஆண்ட்ராய்டு 9 (Android 9) மற்றும் ஐஓஎஸ் 11 (iOS 11) ஆகிய ஓஎஸ் அல்லது அதற்கு மேலான வெர்ஷனில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த மாடலில் 6000 க்கும் மேற்பட்ட கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன.

இதன் சென்சார்களை பொறுத்தவரை, அக்சிலிரேமீட்டர் (Accelerometer), கைரோ சென்சார் (Gyro Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), அம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் ஏர் பிரஷர் சென்சார் (Air Pressure Sensor) ஆகியவை வருகின்றன.

இந்த வாட்ச் 4 ப்ரோ மாடலை ஹானர் ஹெல்த் ஆப் (HONOR Health App) மூலம் பயன்படுத்தலாம். ஸ்லீபிங், வாக்கிங், ரன்னிங், ஸ்விம்மிங் போன் டெய்லி ஆக்டிவிட்டிகளை துல்லியமாக கண்காணிக்கலாம். இந்த ஹானர் மாடலில் மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) வருகிறது. இதுவொரு லோவ்-பவர் சிப்செட் (Low Power Chip) மாடலாகும்.

இந்த ஹானர் வாட்ச் 4 ப்ரோ மாடலில் ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 (SpO2) மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), ஸ்ட்ரெஸ் டிராக்கிங் மானிட்டர் (Stress Tracking Monitor) ஆகியவை வருகின்றன. இதில் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் (5 ATM Water Resistant) வருகிறது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில் ஜிபிஎஸ் (GPS), என்ஃஎப்சி (NFC) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) ஆகியவை வருகின்றன.

அதோடு எல்டிஇ (LTE) சப்போர்ட் வருகிறது. இந்த ஹானர் மாடலில் 480mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஸ்மார்ட் மோடில் (Smart Mode) 10 நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கக்கூடியது. அதேபோல ஈ-சிம் மோடில் 3 நாட்கள் பேக்கப் கொடுக்கும். இதற்கு வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சாப்போர்ட் உள்ளது. இந்த வாட்ச் பேட்டரியோடு சேர்த்து வெறும் 50 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

இந்த மாடல் கார்பன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Carbon Stainless Steel) மற்றும் பாலிமர் ஃபைபர் காம்போசைட் மெட்டீரியல் (Polymer Fiber Composite Material) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விடன் (Viton) மற்றும் லெதர் ஸ்ட்ராப் (Leather Strap) மாடல்கள் வருகின்றன. டார்க் கிரீன் (Dark Green), பிரவுன் (Brown) மற்றும் பிளாக் (Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, ப்ரீ-ஆர்டருக்கு வந்துள்ளது.

இந்த ஹானர் வாட்ச் 4 ப்ரோ மாடலின் சிலிகான் ஸ்ட்ராப் (Silicone Strap) வேரியண்ட்டின் விலை ரூ.18,365ஆகவும், லெதர் ஸ்ட்ராப் (Leather Strap) வேரியண்ட்டின் விலை ரூ.20,515ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச் இந்தியா உள்பட மற்ற நாடுகளிலும் அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Watch 4 Pro With AMOLED Display, E SIM Support Sale From October 16 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X