ஆளப்போகும் ஸ்மார்ட்வாட்ச்! SIM கார்டு.. LTE நெட்வொர்க்.. 32MB ரேம்.. 4GB மெமரி.. மிரள வைக்கும் மாடல்!
உலகிலேயே முதல் முறையாக ஒரு போனுக்கு நிகராக ஆண்ட்ராய்டு ஓஎஸ், LTE நெட்வொர்க், 32 எம்பி ரேம், 4 ஜிபி ஸ்டோர்ஜ், அமோலெட் டிஸ்பிளே, இ-சிம் சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் ஹானர் வாட்ச் 4 (HONOR Watch 4) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி ஒரு முழு கம்ப்யூட்டரின் அம்சங்களை அதைவிட பல மடங்கு சிறிய ஸ்மார்ட்போனுக்குள் அடைத்திருக்கிறது. இப்போது, அதையும் பின்னுக்குத்தள்ளி ஸ்மார்ட்வாட்ச்களுக்குள் போன்களில் இருக்கும் அம்சங்களை கொடுக்க காத்திருக்கிறது. மக்களிடையே ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவற்றில் ஏராளமான அம்சங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு மினி டாக்டரை போல ஸ்மார்ட்வாட்ச்கள் பல்வேறு ஹெல்த் மானிட்டர்களை கொண்டுள்ளன. நீங்கள் எவ்வளவு நேரம் தூங்கினீர்கள்? நடந்தீர்கள்? ஓடினீர்கள்? ஹாட் ரேட் சீராக இருக்கிறதா? ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது? உள்ளிட்ட அனைத்தையும் ஸ்மார்ட்வாட்ச்கள் துல்லியமாக சொல்லிவிடும். இந்த அம்சங்களே வியப்பை கொடுக்கிறது என்றால், ஹானர் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் பற்றி அறிந்தால் "ஸ்மார்ட்போனே வேண்டாம் போலயே" என்பது போல் தோன்றும்.
ஹானர் வாட்ச் 4 அம்சங்கள் (HONOR Watch 4 Specifications): இந்த ஹானர் ஸ்மார்ட்வாட்ச் 1.75 இன்ச் (450 x 390 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 340 பிபிஐ (PPI) வருகிறது. இ-சிம் (eSIM ) மற்றும் ப்ளூடூத் V5.2 சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 9 ஓஎஸ் மற்றும் ஐஓஎஸ் 11 ஓஎஸ் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
4 ஜிபி ரேம் + 32 எம்பி ரேம் கொண்டிருக்கிறது. 400+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் மற்றும் 85 ஸ்போர்ட் மோட்கள் வருகின்றன. அதோடு 12 ப்ரொபஷனல் வொர்க் அவுட் மோட்கள் இருக்கின்றன. ஹார்ட் ரேட் மானிட்டர், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர், ஸ்லீப்பிங் டிராக்கர் உள்ளிட்ட ஹெல்த் மானிட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வருகிறது.
ஜிபிஎஸ், பெய்டோவ், குளோனாஸ், கலிலியோ, என்எஃப்சி சப்போர்ட் கொண்டுள்ளது. 32 கிராம் வெயிட் மட்டுமே உள்ளது. LTE நெட்வொர்க் வருகிறது. 10 நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. இந்த ஹானர் வாட்ச் 4 மார்னிங் கோல்டு (Morning Gold), வாட்டர் ப்ளூ (Water Blue), ஓபிசிடியன் பிளாக் (Obsidian Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச் சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையை பொறுத்தவரையில், ரூ.11,440 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








