பாப்அப் கேமராவுடன் அசத்தலான் ஹானர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

|

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு புதிய ஹார்மனி ஒஎஸ் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் என்ற அழைக்கப்படும் புதிய ஹானர் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

 55-இன்ச் 4Kயுஎச்டி ஸ்கிரீன்

55-இன்ச் 4Kயுஎச்டி ஸ்கிரீன்

ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்கள் 55-இன்ச் 4Kயுஎச்டி ஸ்கிரீன், குவாட்கோர் ஹோங்கு 818 சிப்
கொண்டிருக்கின்றன. சீனாவில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் அடுத்தவாரம் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட் டிவிகளின் சர்வதேச வெளீயிடு பற்றி ஹானர் சார்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

பாதுகாப்பு வசதி

பாதுகாப்பு வசதி

ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்களில் 55-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது,
பின்பு 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் ஜெர்மன் டி.யு.வி. ரெயின்லேண்ட் லோ புளு-ஐ பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள்.

ஆகஸ்ட் 20: அசத்தலான ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!ஆகஸ்ட் 20: அசத்தலான ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

 பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு

பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு

புதிய ஸ்மார்ட் டிவிகளில் மூன்று புறங்களிலும் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் ஹோங்கு 818 குவாட்-கோர் பிராசஸர், மாலி-G51 GPU மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றன

நாய்ஸ் ரெடக்‌ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட்

நாய்ஸ் ரெடக்‌ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட்

ஹானர் புதிய ஸ்மார்ட் டிவிகளில் ஏழடுக்கு இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம்,மோஷன் எஸ்டிமேட், மோஷன் காம்பென்சேஷன்,ஹை டைனமிக் ரேன்ஜ் இமேஜிங், சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் ரெடக்‌ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட்
இம்ப்ரூவ்மென்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அம்பானியின் அறிவிப்பு! 4K LED டிவி, 4Kசெட்-டாப் இலவசம்!மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அம்பானியின் அறிவிப்பு! 4K LED டிவி, 4Kசெட்-டாப் இலவசம்!

இயங்குதளம்

இயங்குதளம்

குறிப்பாக ஹானர் விஷன் ஸ்மார்ட் டிவியில்; 16ஜிபி மெமரி மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடலில் 32ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹார்மனிஒ.எஸ். 1.0 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ஹானர் விஷன் ப்ரோ  விலை

ஹானர் விஷன் ப்ரோ விலை

மேலும் ப்ளூடூத் 5, வைபை, மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்இ ஒரு யு.எஸ்.பி. 3.0 மற்றும் ஈத்தர்நெட் போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஹானர் விஷன் ஸ்மார்ட் டிவியின் இந்திய விலை ரூ.38,200-ஆக உள்ளது. மேலும் ஹானர் விஷன் ப்ரோ சாதனத்தின் இந்திய விலை ரூ.48,200-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
honor vision smart tv series launched price specs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X