இந்தியா: அக்டோபர்14: பாப்அப் கேமராவுடன் அசத்தலான் ஹானர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் வரும் அக்டோபர்14-ம் தேதி தனது புதிய ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ என்ற அழைக்கப்படும் புதிய ஹானர் டிவி மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் விஷன் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் பாப் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த பாப்-அப் கேமரா 1080 பிக்சல் திர்மானம் மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு தகுந்தபடி படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் டிவியில் செல்பீ கேமரா என்பது தேவையில்லாத ஒன்றுதான் என பல்வேறு மக்கள் கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்களில் 55-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் ஜெர்மன் டி.யு.வி. ரெயின்லேண்ட் லோ புளு-ஐ பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள். மேலும் ஹானர் விஷன் 6 ஸ்பீக்கர்கள்(10வாட்)ஆதரவும், ஹானர் விஷன் ப்ரோ 4 ஸ்பீக்கர்கள்(10வாட்)ஆதரவும் கொண்டு வெளிவருகிறது.

புதிய ஸ்மார்ட் டிவிகளில் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு புதிய ஸ்மார்ட் டிவிகளில் மூன்று புறங்களிலும் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் ஹோங்கு 818 குவாட்-கோர் பிராசஸர், மாலி-G51 GPU வசதி இடம்பெற்றுள்ளன. மேலும் ஹானர் விஷன் சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி உள்ளது,பின்பு ஹானர் விஷன் ப்ரோ சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது.

ஹானர் புதிய ஸ்மார்ட் டிவிகளில் ஏழடுக்கு இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம்,மோஷன் எஸ்டிமேட், மோஷன் காம்பென்சேஷன், ஹை டைனமிக் ரேன்ஜ் இமேஜிங், சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் ரெடக்ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹார்மனிஒ.எஸ். 1.0 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ப்ளூடூத் 5, வைபை, மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்இ ஒரு யு.எஸ்.பி. 3.0 மற்றும் ஈத்தர்நெட் போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்கள் 55-இன்ச் 4Kயுஎச்டி ஸ்கிரீன், குவாட்கோர் ஹோங்கு 818 சிப் கொண்டு வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஹானர் விஷன் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.38,200-என்றும், பின்பு ஹானர் விஷன் ப்ரோ ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.48,300-எனவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications