Home
Gadgets

70 நாட்கள் Standby Mode பேட்டரி லைஃப் உடன் அறிமுகமான 11.5-இன்ச் டேப்லெட்.. எந்த மாடல்?

வழக்கமாக போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட்போன்கள் தான் வரிசையாக அறிமுகம் செய்யப்படும். ஆனால் ஆப்பிள் நிறுவனம் அதன் அதன் லேட்டஸ்ட் 2025 ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்ததும், அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டு கொண்டு "வரிசையாக" தத்தம் ஆண்ட்ராய்டு டேப்லெட்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.

விவோ பேட் 4 ப்ரோ (Vivo Pad 4 Pro) மாடலையும், ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ பேட் 4 ப்ரோ (Oppo Pad 4 Pro) மாடலையும் மற்றும் ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ பேட் 7எஸ் ப்ரோ (Xiaomi Pad 7s Pro) மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.

70 நாட்கள் Standby Mode பேட்டரி லைஃப் உடன் அறிமுகமான டேப்லெட்!

மேலும் சாம்சங் அதன் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ (Samsung Galaxy Tab S10 FE) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் (Samsung Galaxy Tab S10 FE Plus) டேப்லெட்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. கடைசியாக ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் பாதியில் - ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடனான ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் "நீங்க எல்லாரும் பிளான் பண்ணிகிட்டே இருக்க.. நான் லான்ச் பண்ணிடுறேன்!" என்கிற படியாக ஹானர் நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. அது ஹானர் பேட் எக்ஸ்9ஏ (Honor Pad X9a) மாடல் ஆகும். இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்உடனான 11.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ள டேப்லெட் ஆகும்

ஹானர் பேட் எக்ஸ்9ஏ டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்:
- 11.5-இன்ச் 2.5கே (1504 x 2508 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்
- 8ஜிபி ரேம்
- பயன்படுத்தப்படாத இருந்து ஸ்டோரேஜில் இருந்து 8ஜிபி விர்ச்சுவல் ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- ஆட்டோஃபோகஸ் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 8எம்பி ரியர் கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 5எம்பி செல்பீ கேமரா

- வைஃபை மற்றும் ப்ளூடூத் 5.1
- ஹூவாய் நிறுவனத்தின் வயர்லெஸ் கீபோர்டுகள் மற்றும் ஸ்டைலஸ்க்கான ஆதரவு
- ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான மேஜிக் ஓஎஸ் 9.0
- குவாட் ஸ்பீக்கர் செட்டப்
- 8300mAh லி-அயன் பேட்டரி
- 35W பாஸ்ட் சார்ஜிங்
- ஸ்டென்ட்பை மோட்-ல் 70 நாட்கள் வரை பேட்டரி லைஃப்
- அளவீட்டில் 267.3x167x6.77மிமீ
- எடையில் சுமார் 475 கிராம்

ஹானர் பேட் எக்ஸ்9ஏ டேப்லெட்டின் விலை விவரங்கள்: மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹானர் பேட் எக்ஸ்9ஏ டேப்லெட்டின் விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் இந்த டேப்லெட் ஏற்கனவே ஹானர் மலேசியா வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது சிங்கிள் க்ரே கலரில் வாங்க கிடைக்கும். இது 8ஜிபி ரேம் + 128ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இது 3.4கே ரெசல்யூஷன் உடனான 13.2-இன்ச் எல்சிடி பேனலை கொண்டிருக்கலாம். ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 16 ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1 TB வரை UFS 4.0 ஸ்டோரேஜை பேக் செய்யலாம்.

இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 க்கான கலர்ஓஎஸ்ஸில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சுமார் 10,000mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக்கலாம். மேலும் 13 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம். ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Pad X9a up to 70 days of battery life in standby mode launched Check Out Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X