அமேசான் அதிரடி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 7,250mAh பேட்டரி.. ஆஃபரில் Honor டேப்லெட்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது ஹானர் பேட் எக்ஸ் 9 (Honor Pad X9) மாடல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது 2கே டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், 6 ஸ்பீக்கர்கள் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் கொண்டு இந்த ஹானர் பேட் எக்ஸ் 9 மாடல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் ஹானர் பேட் எக்ஸ் 9 மாடலுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த டேப்லெட் மாடலை ரூ.12999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஹானர் பேட் எக்ஸ் 9 அம்சங்கள் (Honor Pad X9 Specifications): 11.5 இன்ச் 2கே டிஸ்பிளே கொண்டுள்ளது ஹானர் பேட் எக்ஸ் 9 மாடல். மேலும் இதன் இந்த டிஸ்பிளேவில் 2000 x 1200 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
ஸ்னாப்டிராகன் 685 (Snapdragon 685) சிப்செட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பேட் எக்ஸ் 9 மாடல். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் இதில் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் வெளிவந்துள்ளது இந்த ஹானர் பேட் எக்ஸ் 9 மாடல். குறிப்பாக இதில் கிரிஸ்டர் கிளியர் சவுண்டிங் அனுபவத்துக்காக ஹானர் ஹிஸ்டென் (HONOR Histen) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஆக்சிலரேட் சென்சார் (Accelerate Sensor) மற்றும் கிரேவிட்டி சென்சார் (Gravity Sensor) வசதிகளும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
ஹானர் பேட் எக்ஸ் 9 மாடலில் 7,250mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் டைப் - சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட்டின் ஆடியோவை பொறுத்தவரையில், 1 மைக் மற்றும் 6 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
5 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது ஹானர் பேட் எக்ஸ் 9 மாடல். இந்த கேமராவில் எச்டிஆர் (HDR), டைம் லேப்ஸ் (Time-Lapse), செல்பீ மிரரிங் (Selfie Mirroring) உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன. ஆனால் 5எம்பி ரியர் கேமராவுக்கு பதில் 13எம்பி கேமரா இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
ப்ளூடூத் பிடி5.1 (Bluetooth BT5.1), வைபை 5,801.11 (WIFI 5,802.11) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் 499 கிராம் எடைக் கொண்டுள்ளது ஹானர் பேட் எக்ஸ் 9 மாடல். குறிப்பாக கிரே நிறத்தில் இந்த டேப்லெட் மாடலை வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








