Home
Gadgets

மிரளவிட்ட டேப்லெட்.. 11.5 இன்ச் டிஸ்பிளே.. 10100mAh பேட்டரி.. 8 ஸ்பீக்கர்கள்.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்?

வாங்குனா இப்படிவொரு டேப்லெட் வாங்கனும்பா என்று சொல்லும்படி 11.5 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, 10100mAh பேட்டரி, 66W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஸ்பீக்கர்கள், 13 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் ஹானர் பேட் வி9 (HONOR Pad V9) டேப்லெட் களமிறங்கி இருக்கிறது. இந்த டேப்லெட்டின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

லேப்டாப் வேண்டாம் ஆனால், அதேபோல டிஸ்பிளே குவாலிட்டியில் டேப்லெட் வேண்டும், அதில் ஓடிடிக்கு ஏற்ப பட்டையை கிளப்பும் பீச்சர்களும் இருக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஹானர் பேட் வி9 மாடல் பக்கா தேர்வாக இருக்கும். இதன் டிஸ்பிளே பீச்சர்களே டேப்லெட் கஸ்டமர்களை தட்டித் தூக்குகிறது.

மிரளவிட்ட டேப்லெட்.. 11.5 இன்ச் டிஸ்பிளே.. 10100mAh பேட்டரி.. மாடல்?

ஹானர் பேட் வி9 அம்சங்கள் (HONOR Pad V9 Specifications): இந்த டேப்லெட்டில் 11.5 இன்ச் (2800 × 1840 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் பட்டையை கிளப்பும் கேமிங் அவுட்புட் மற்றும் மல்டி மீடியா அவுட்புட் கொடுக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

இதுபோக 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 274 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், எச்டிஆர் விவிட் (HDR Vivid), 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் பி3 கலர் காமட் கிடைக்கிறது. ஆகவே, ஓடிடி பிரியர்களுக்கான பக்கா ஆப்ஷனாக இந்த டேப்லெட் இருக்கும். இதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் சிப்செட் கிடைக்கிறது.

ஆகவே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 எலைட் (4nm Octa Core Dimensity 8350 Elite) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட் மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போனுக்கு நிகராக மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

இந்த ஹானர் பேட் வி9 டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி சப்போர்ட் கிடைக்கிறது. கேமராவிலும் பிரீமியம் காட்டும்படி பீச்சர்கள் இருக்கின்றன. அதாவது, ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா மற்றும் பிக்சட் போகஸ் (Fixed Focus) சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 5050mAh கேபாசிட்டியுடன் டூயல்-செல் பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, 10100mAh பேட்டரி மற்றும் 66W டர்போ சார்ஜிங் (Turbo Charging) சப்போர்ட் கிடைக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும், 6.1 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது.

வெறும் 475 கிராம் எடை மட்டுமே இருக்கிறது. இந்த ஹானர் பேட் வி9 டேப்லெட்டில் 8 ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. ஆகவே, வீடியோ மட்டுமல்லாமல், ஆடியோ அவுட்புட்டும் பிரீமியமாக கிடைக்கும். இதன் கனெக்டிவிட்டியை பார்க்கையில், டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த ஹானர் பேட் வி9 டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.40,830ஆக இருக்கிறது. இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஐரோப்பா மற்றும் யுகே போன்ற நாடுகளில் விற்பனை தொடங்குகிறது. இதற்கு பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
HONOR Pad V9 With 8GB RAM 10100mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X