Home
Gadgets

பிரிச்சு விட்டாய்ங்க.. பட்ஜெட்ல IMAX டிஸ்பிளே.. 8 ஸ்பீக்கர்கள்.. 12GB ரேம்.. 10100mAh பேட்டரி.. எந்த மாடல்?

டேப்லெட் பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு வீடியோ மற்றும் ஆடியோ மட்டுமல்லாமல், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 11.5 இன்ச் டிஸ்பிளே, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10100mAh பேட்டரி, ஹை-ரெஸ் ஆடியோ கொண்ட 8 ஸ்பீக்கர்கள் போன்ற பக்கா பிரீமியம் பீச்சர்களுடன் ஹானர் பேட் வி9 (HONOR Pad V9) வெளியாகி இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் பட்ஜெட்டில் வெளியாகி இருப்பதால் மார்கெட்டை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ஹானர் டேப்லெட்டின் பீச்சர்கள், விலை இதோ.

வீடியோவுக்கு மட்டுமே டேப்லெட் வாங்கும் கஸ்டமர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கான பிரீமியம் பீச்சர்களை பட்ஜெட்டில் இந்த டேப்லெட் கவர் செய்துள்ளது. இதுபோக பர்ஃபாமென்ஸ் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 12 ஜிபி ரேம், டைமன்சிட்டி சிப்செட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.

பிரிச்சு விட்டாய்ங்க.. பட்ஜெட்ல IMAX டிஸ்பிளே.. 8 ஸ்பீக்கர்கள்.. 12GB!

ஹானர் பேட் வி9 அம்சங்கள் (HONOR Pad V9 Specifications): டிஸ்பிளேவில் அடித்து கொள்ள முடியாதபடி பீச்சர்கள் இருக்கின்றன. 2.8K ரெசொலூஷன் கொண்ட 11.5 இன்ச் (2800 x 1840 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 291 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.

இதுபோக, எச்டிசிஆர் விவிட் (HDR Vivid) மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கொடுக்கிறது. ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த வீடியோ பீச்சர்களுக்கு ஏற்ப ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட 8 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) கிடைக்கிறது.

இந்த ஆடியோவுக்கும் ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) சப்போர்ட் உள்ளது. இந்த ஹானர் பேட் வி9 டேப்லெட்டில் மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் எடிஷன் (Dimensity 8350 Extreme Edition) சிப்செட் கிடைக்கிறது. இந்த மேஜிக்ஓஎஸ் ஏஐ பீச்சர்களை பேக் செய்துள்ளது.

ஆகவே, ஏஐ நோட், ஏஐ டாக்குமெண்ட், மல்டிவிண்டோ, ஒன்-கிளிக் கன்டென்ட் போன்ற பல்வேறு பீச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஏஐ இன்டிகிரேடட் யோயோ அசிஸ்டன்ட் (YOYO Assistant) இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொடுக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

இதுபோக 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் கிடைக்கிறது. இந்த ஹானர் பேட் வி9 மாடலில் பேக்கப் பற்றிய கவலையில்லை. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 10100mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த டேப்லெட்டில் 13 எம்பி ஆட்டோபோகஸ் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி பிக்சட் போகஸ் செல்பீ கேமரா கிடைக்கிறது.

கனெக்டிவிட்டியை பார்க்கையில் வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) சப்போர்ட் வருகிறது. இந்த டேப்லெட்டுக்கு ஸ்மார்ட் ப்ளூடூத் கீபோர்ட் (Smart Bluetooth Keyboard) மற்றும் மேஜிக் பென்சில் 3 (Magic Pencil 3) சப்போர்ட் உள்ளது. லுயன் பர்பிள் (Luyan Purple) மற்றும் காங்ஷன் கிரே (Cangshan Grey) கலர்களில் கிடைக்கிறது.

மேலும், யுலாங் ஸ்னோ (Yulong Snow) சப்போர்ட் உள்ளது. இந்த ஹானர் டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,305ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,640ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,135ஆகவும் இருக்கிறது. சீனாவில் டிசம்பர் 24ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Pad V9 With 12GB RAM 10100mAh Battery Sale From December 24 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X