Home
Gadgets

முரட்டு டேப்லெட்.. 10100mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. 12GB ரேம்.. 8 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

10100mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம் மற்றும் 8 ஸ்பீக்கர்களுடன் ஹானர் நிறுவனத்தின் ஹானர் பேட் ஜிடி (HONOR Pad GT) களமிறங்கி இருக்கிறது. டைமன்சிட்டி சிப்செட், குளோரி ஐஸ் கூலிங் சிஸ்டம், ஓயசிஸ் ஐ புரொடெக்சன் போன்ற பீச்சர்களிலும் பின்னி எடுக்கிறது. இந்த டேப்லெட்டின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம்.

ஹானர் பேட் ஜிடி அம்சங்கள் (HONOR Pad GT Specifications): இந்த டேப்லெட்டில் 11.5 இன்ச் (2800 x 1840 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz ட்ரூ டச் சாம்பிளிங் ரேட், 291 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 16X சப்-பிக்சல் டச் கிடைக்கிறது.

முரட்டு டேப்லெட்.. 10100mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே!

5 லேயர்கள் ஐ புரொடெக்சன் கொடுக்கும்படி குளோ ஓயசிஸ் ஐ புரொடெக்சன் (Glory Oasis Eye Protection) சப்போர்ட் கிடைக்கிறது. ஓடிடி பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும்படி ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) கிடைக்கிறது. மேலும், ஏஐ டீபோகஸ் ஐ புரொடெக்சன் (AI Defocus Eye Protection), டிசி டிம்மிங் போன்ற பிக்சல்கள் கிடைக்கின்றன. பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

இந்த ஹானர் பேட் ஜிடி மாடலில் 66W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் (Super Fast Charging) சப்போர்ட் கொண்ட 10100mAh பேட்டரி கிடைக்கிறது. பர்ஃபாமென்ஸ் பூஸ்ட் கொடுக்க ஹானர் டர்போ எக்ஸ் (HONOR Turbo X) டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த டெக்னாலஜி மூலம் பேட்டரி பர்ஃபாமென்ஸானது தேவைக்கு ஏற்ப ரியல் டைமில் ஆப்டிமைசேஷன் செய்யப்படும்.

பெரிய பேட்டரி இருந்தும் 6.12 எம்எம் தடிமனில் அல்ட்ரா தின் பாடி கொடுக்கிறது. அதேபோல 480 கிராம் எடை மட்டுமே வருகிறது. இதில் மெட்டல் ஃபிரேமும் அடங்குகிறது. இந்த டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. மேலம், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலும் உள்ளது.

முரட்டு டேப்லெட்.. 10100mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே!

இந்த ஹானர் பேட் ஜிடி டேப்லெட்டில் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் எடிஷன் (Dimensity 8350 Extreme Edition) சிப்செட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு அவுட்புட் கொடுக்கும்போது பேட்டரி ரீட் கன்ட்ரோலுக்கு ஹானர் ஐஸ் கூலிங் சிஸ்டம் (HONOR Ice Cooling System) கிடைக்கிறது. டிஸ்பிளேவில் மட்டுமல்லாமல், ஆடியோ பீச்சர்களிலும் இந்த டேப்லெட் பட்டையை கிளப்புகிறது.

ஸ்பாஷியல் ஆடியோ போசிஷனிங் டெக்னாலஜி (Spatial Audio Positioning Technology) சப்போர்ட் கொண்ட 8 ஸ்பீக்கர்களை கொடுக்கிறது. கன்ட்ரோல்களுக்காக கீ-போர்ட் மற்றும் மவுஸ் கனெக்டிவிட்டியும் கிடைக்கிறது. ஆகவே, லேப்டாப்புக்கு நிகரான அனுபவம் இந்த ஹானர் டேப்லெட்டில் எதிர்பார்க்கலாம். ஜிடி ப்ளூ (GT Blue) கலர் இருக்கிறது.

பாண்டம் கிரே (Phantom Gray) அல்லது ஐஸ் கிரிஸ்டல் ஒயிட் (Ice Crystal White) ஆப்ஷனும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,169 பட்ஜெட்டில் இருக்கிறது. அதேபோல 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.25,680ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,173ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. விலையும் யுவானின் அடிப்படையில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
HONOR Pad GT With 10100mAh Battery 8GB RAM Launched China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X