மிரட்டி விட்டாப்ல.. 6.29 மி.மீ பாடியில் 10100mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. 6 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
வெறும் 6.29 மி.மீ தடிமன் கொண்ட பாடியில் 10100mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன் (HONOR Pad 20 Pro Paperlike Edition) வெளியாகி இருக்கிறது. இதுபோக 6 ஸ்பீக்கர்கள், ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு டிஸ்பிளே போன்ற பீச்சர்களையும் கொடுத்து மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன் மாடலின் பீச்சர்களை முதலில் பார்த்துவிட்டு மற்ற விவரங்களுக்கு செல்லலாம்.

ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன் அம்சங்கள் (HONOR Pad 20 Pro Paperlike Edition Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன் இருக்கிறது. அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை கொடுக்கும்படி 12.1 இன்ச் (3000 x 1872 பிக்சல்கள்) டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மாடலுக்கு 3K ரெசொலூஷன், டிசிஐ பி3 வைடு கலர் காமட் கிடைக்கிறது. 165Hz மற்றும் 700 எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enanced) உள்ளது.
8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன் கிடைக்க இருக்கிறது. மேஜிக்ஓஎஸ் 10.0 (MagicOS 10.0) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி ஃப்ரன்ட் கேமரா (செல்பீ & வீடியோ கால்களுக்கு) கொடுக்கப்பட்டு உள்ளது.
பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப ஆடியோவிலும் இந்த ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன் பட்டையை கிளப்பி இருக்கிறது. 6 ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கர்களுக்கு டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் (DTS: X Ultra Sound) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹானர் ஸ்பாஷியல் ஆடியோ (HONOR Spatial Audio) உள்ளது.
66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10100mAh பேட்டரியை இந்த ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன் மாடல் கொடுக்கிறது. இந்த பேட்டரி இருந்தும் 6.29 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், எடை 537 கிராம் இருக்கிறது. ஏனென்றால், பிரீமியம் மெட்டாலிக் ஃபினிஷிங் பாடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. வை-பை 7 (Wi-Fi 7) கிடைக்கிறது.
மேலும், ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0), மற்றும் டைப்-சி (Type-C) போர்ட் உள்ளது. ஓடிஜி (OTG) சப்போர்ட் கிடைக்கிறது. ஹானர் மேஜிக் பென்சில் 4எஸ் (HONOR Magic Pencil 4s) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாடலின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், அந்தந்த மார்கெட்டுக்கு ஏற்ப விலை மாறுபடும்.


Click it and Unblock the Notifications