Home
Gadgets

இது வேற மாதிரி இருக்கு.. 12450mAh பேட்டரி.. 12GB ரேம்.. 8 ஸ்பீக்கர்கள்.. 3D ஆடியோ.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஹானர் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஹானர் மேஜிக்பேட் 3 ப்ரோ (HONOR MagicPad 3 Pro) டேப்லெட் களமிறங்கி இருக்கிறது. 12450mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 8 ஸ்பீக்கர்கள், 3டி ஸ்பாஷியல் ஆடியோ, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்ட இந்த ஹானர் மேஜிக்பேட் 3 ப்ரோ மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் ஹானர் மேஜிக்8 (HONOR Magic8), ஹானர் மேஜிக்8 ப்ரோ (HONOR Magic8 Pro), ஹானர் இயர்பட்ஸ் 4 (HONOR Earbuds 4) மற்றும் ஹானர் மேஜிக்பேட் 3 ப்ரோ போன்ற மாடல்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில் டிஸ்பிளே மற்றும் ஆடியோவுக்காக மட்டுமே டேப்லெட்களை விரும்பும் பிரியர்களை ஹானர் மேஜிக்பேட் 3 ப்ரோ தட்டித்தூக்கி இருக்கிறது.

இது வேற மாதிரி இருக்கு.. 12450mAh பேட்டரி.. 12GB ரேம்.. 8 ஸ்பீக்கர!

ஏனென்றால், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் எச்டிஆர்10 மற்றும் 3.2K ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளே மட்டுமல்லாமல், 3டி ஸ்பாஷியல் ஆடியோவுடன் 8 ஸ்பீக்கர்களை கொடுத்து இருக்கிறது. இதுபோக ஏஐ அல்ட்ரா ஹை-டெபனிஷன் என்ஜின் போன்ற பீச்சர்களுடன் வீடியோ என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்கிறது. இப்படி மொத்த டிஸ்பிளே, ஆடியோ பீச்சர்கள் மிரளவிடுகின்றன.

ஹானர் மேஜிக்பேட் 3 ப்ரோ அம்சங்கள் (HONOR MagicPad 3 Pro Specifications): இந்த ஹானர் டேப்லெட்டில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. அதேபோல ஏஐ பீச்சர்களுடன் கூடிய மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் உள்ளது.

இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 13.3 இன்ச் (3200 x 2136 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 3.2K ரெசொலூஷன் மற்றும் 144Hz, 165Hz போன்ற வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10 (HDR10) மற்றும் 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இது வேற மாதிரி இருக்கு.. 12450mAh பேட்டரி.. 12GB ரேம்.. 8 ஸ்பீக்கர!

மேலும், 291 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இந்த ஹானர் மேஜிக்பேட் 3 ப்ரோ டேப்லெட்டில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது. ஆடியோவை பார்க்கையில், 8 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கர்களுக்கு 3டி ஸ்பாஷியல் ஆடியோ (3D Spatial Audio) கிடைக்கிறது.

மேலும், 3 மைக்ரோபோன்கள் (Microphones) வருகிறது. 80W ஹானர் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 12450mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தும் 5.79 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. 595 கிராம் எடை வருகிறது. 9 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. வை-பை 7 மற்றும் ப்ளூடூத் 6.0 போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன.

12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.46,848ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் ரூ.54,232ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் ரூ.57,931ஆகவும் உள்ளது. ப்ளோட்டிங் கோல்டு (Floating Gold), மூன் ஷோடோ ஒயிட் (Moon Shadow White) மற்றும் ஸ்டார்ரி ஸ்கை கிரே (Starry Sky Gray) கலர்கள் உள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. பிறகு மற்ற நாடுகளில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR MagicPad 3 Pro With 12GB RAM 12450mAh Battery 80W Charging Launched Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X