Home
Gadgets

சும்மா கிழி.. AI டிரான்ஸ்லேஷன்.. ANC ஆடியோ.. சப்வூப்பர் டிரைவர்.. 480mAh பேட்டரி.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஆடியோ பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்யும்படி ஏஐ டிரான்ஸ்லேஷன் மட்டுமல்லாமல் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 480mAh பேட்டரி, IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட், 22 மணி நேரங்களுக்கு பேக்கப் போன்ற பீச்சர்களுடன் ஹானர் இயர்பட்ஸ் ஓப்பன் (HONOR Earbuds Open) களமிறங்கி இருக்கிறது. ஆட்டோ-ரீகனெக்ட் மற்றும் டூயல் கனெக்டிவிட்டி போன்ற சப்போர்ட் கொடுக்கும் இந்த ஹானர் இயர்பட்ஸ் ஓப்பன் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஹானர் இயர்பட்ஸ் ஓப்பன் (HONOR Earbuds Open Specifications): இந்த இயர்பட்ஸ் மற்ற மாடல்களை போலல்லாமல் ஓப்பன் டிசைன் கொடுக்கிறது. ஆகவே, கூடுதல் கம்போர்ட் மற்றும் அட்டாச்மெண்ட் கிடைக்கிறது. ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி பிரியர்களுக்கு ஏற்ற பக்கா மாடலாக இது இருக்கிறது. ஃபுட் கிரேடு சிலிகான் (Food Grade Silicone) பாடி கொடுக்கிறது.

சும்மா கிழி.. AI டிரான்ஸ்லேஷன்.. ANC ஆடியோ.. சப்வூப்பர் டிரைவர்!

இந்த டிசைன் மற்றும் பாடியில் போலார் கோல்டு (Polar Gold) மற்றும் போலார் பிளாக் (Polar Black) கலர்களில் விற்பனைக்கு வருகிறது. 16 எம்எம் மேக்னடிக் டிரைவர் கிடைக்கிறது. இதுவொரு டைட்டானியம்-பிளேடெட் ட்வீடர் டோம் (Titanium-plated Tweeter Dome) மாடலாகும். ஆகவே, கிளியர் மற்றும் எஃபெக்டிவ் ஆடியோ அவுட்புட் இந்த மாடலில் கிடைக்கும்.

சரவுண்ட் சப்வூப்பர் (Surround Subwoofer) சப்போர்ட் உள்ளது. பேஸ் பிரியர்களை தட்டித் தூக்கும்படி பேஸ் ஆடியோவில் டூயல்-அல்கோரிதம் கிடைக்கிறது. இதன் மூலம் விர்ச்சுவல் பேஸ் (Virtual Bass) மற்றும் டைனாமிக் கன்ட்ரோல் (Dynamic Control) கிடைக்கிறது. இந்த ஹானர் இயர்பட்ஸ் ஓப்பன் மாடலில் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி கிடைக்கிறது.

ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Active Noise Cancellation) சப்போர்ட் கொண்ட 3 மைக்குகள் கிடைக்கின்றன. ஆகவே, ஆடியோ மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களும் பட்டையை கிளப்பும்படி கிரிஸ்டல் கிளியராக எதிர்பார்க்கலாம். இதுபோக ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் கிடைக்கிறது. இதில் வாய்ஸ் கால்களுக்கான டெக்னாலஜி இருக்கிறது.

அதாவது, வாய்ஸ் கால்களின் போது வாய்ஸ்களை மட்டுமே என்ஹான்ஸ் செய்யும்படி வாய்ஸ் பிக்கப் டெக்னாலஜி (Voice Pickup Technology) கிடைக்கிறது. ஏஐ பிரைவசி கால் (AI Privacy Call) சப்போர்ட் உள்ளது. இதில் ஆடியோ லீக் கன்ட்ரோல் கிடைக்கிறது. இதன் மூலம் உங்கள் அருகில் நின்று கொண்டிருப்பவர்களுக்கு உங்களது இயர்பட்ஸ் ஆடியோ கிளியராக கேட்காது.

இதுபோக ஏஐ டிரான்லேஷன் (AI Translation) சப்போர்ட் கிடைக்கிறது. ஷேர்டு மோட் (Shared Mode) மூலம் உங்களது வாய்ஸ் கால்களை டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ளலாம். இது டூ-வே லாங்குவேஜில் கிடைக்கிறது. ஆகவே, நீங்கள் ஒரு மொழியிலும், எதிரே பேசுபவர்கள் ஒரு மொழியிலும் பேசினாலும் ரியல்-டைமில் அதை டிரான்ஸ்லேட் செய்து கேட்டுக்கொள்ள முடியும்.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மட்டுமல்லாமல், கால் நாய்ஸ் கேன்சலேஷன் (Call Noise Cancellation) கிடைக்கிறது. இந்த ஹானர் இயர்பட்ஸ் ஓப்பன் மாடலில் IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. பிரஸ் மற்றும் ஸ்வைப் கன்ட்ரோல்களை கொடுக்கிறது. சார்ஜிங் கேஸில் 480mAh பேட்டரி கிடைக்கிறது. பட்களில் 58mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது.

22 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். டூயல் கனெக்டிவிடடி, ஆட்டோ ரீ-கனெக்ட், ஃபைண்ட் இயர்பட்ஸ் மற்றும் ஈகியூ மோட் போன்ற பீச்சர்களும் இதில் கிடைக்கிறது. இந்த பிரீமியம் இயர்பட் மாடலின் விலை ரூ.13,520 ஆக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
HONOR Earbuds Open With 480mAh Battery Active Noise Cancellation Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X