Home
Gadgets

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. கம்மி பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. BT காலிங்.. 300mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்தியாவில் ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் உடன் ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் சாய்ஸ் எக்ஸ் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் சாய்ஸ் வாட்ச் அம்சங்கள் (honor choice watch Specifications): 1.95-இன்ச் அமோலெட் 2.5டி கர்வ்ட் டிஸ்பிளே ( AMOLED 2.5D curved display) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. BT காலிங்.. 300mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் டிஸ்பிளேவில் 410 x 502 பிக்சல்கள், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன. குறிப்பாக ஹானர் சாய்ஸ் எக்ஸ் மாடலுக்கு 100+ வாட்ச் பேஸ்கள் (100+ watch faces) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடலில் எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர் ( Stress Monitor), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஃபீமேல் சைக்கிள் டிராக்கர் (Female Cycle Tracker) உள்ளிட்டவை வருகின்றன. குறிப்பாக இந்த அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கருடன் (Microphone/Speaker) ப்ளூடூத் காலிங் சப்போர்ட்(Bluetooth Calling Support) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டென்ஸிற்கான 5ஏடிஎம் (Water and Dust resistant (5ATM)) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

120 வொர்க்கவுட் மோட்கள் கொண்டு வெளிவந்துள்ளது ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடல். மேலும் புளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ் (GLONASS), QZSS நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் போன்ற பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட் மாடல். இந்த ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடலின் எடை 28.3 கிராம் ஆகும்.

காம்பஸ் (Compass), கால்குலேட்டர் (Calculator), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), ரிமோட் ஷட்டர் (Remote Shutter), ஃபைன்ட் போன் (Find Phone), டார்ச் (Torch), வெதர் (Weather), டி.என்.டி (DND), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), அலாரம் (Alarm) உள்ளிட்ட அசத்தலான வசதிகளை கொண்டுள்ளது ஹானர் சாய்ஸ் வாட்ச்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. BT காலிங்.. 300mAh பேட்டரி.. எந்த மாடல்?

300எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த ஹானர் சாய்ஸ் எக்ஸ் மாடல். எனவே 12 நாட்கள் வரை இந்த ஸ்மார்ட்வாட்ச் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ஹானர் சாய்ஸ் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடலின் விலை ரூ.6,499-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடலை ரூ.5,999 விலையில் வாங்கலாம். வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஹானர் இணையதளம் மற்றும் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR CHOICE Watch Launched in India: check specifications, price, availability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X