Home
Gadgets

ரெண்டு லட்டு தின்ன ஆசையா? இந்தியாவுக்கு வருகிறது இரண்டு ஹானர் சாதனங்கள்.. எந்த மாடல்?

வரும் பிப்ரவரி 15-ம் தேதி இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஹானர் எக்ஸ்9பி போன் உடன் இயர்பட்ஸ் எக்ஸ்5 சாதனமும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மெலிதான எடை, பெரிய பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் இயர்பட்ஸ் எக்ஸ்5 (Earbuds X5) சாதனமும் அறிமுகம் செய்யப்படும். விரைவில் இந்த இயர்பட்ஸ் மாடலின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே வெளியான ஹானர் எக்ஸ்9பி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவுக்கு வருகிறது இரண்டு ஹானர் சாதனங்கள்.. எந்த மாடல்?

ஹானர் எக்ஸ்9பி அம்சங்கள் (Honor X9b specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1(Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல். மேம்பட்ட செயல்திறன் வழங்கும் னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்.

இந்த ஹானர் எக்ஸ்9பி போன் மேஜிக் ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபேஸ் அன்லாக் (Face unlock) மற்றும் கைரேகை ஸ்கேனர் ( Fingerprint scanner) வசதி இந்த போனில் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. மேலும் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹானர் எக்ஸ்9பி ஆனது 5800 எம்ஏஎச் பேட்டரியைக் (5800mah battery ) கொண்டுள்ளது.குறிப்பாக இந்த சாதனம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (35W fast charging) வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஹானர் எக்ஸ்9பி போன் விற்பனைக்கு வரும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வருகிறது இரண்டு ஹானர் சாதனங்கள்.. எந்த மாடல்?

இந்த போனில் 5ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளது. மிட்நைட் பிளாக் ( Midnight Black),எமரால்டு க்ரீன் (Emerald Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) நிறங்களில் இந்த ஹானர் போன் வெளிவரும்.

இந்த ஹானர் எக்ஸ்9பி போன் இந்தியாவில் ரூ.30,000 அல்லது ரூ.35,000 விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஹானர் போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Choice Earbuds X5 will be launched alongside the Honor X9b phone: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X