Home
Gadgets

தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?

பட்ஜெட்டும் கம்மியான இருக்கனும், டிசைனும் பிரீமியமா இருக்கனும் என்று கேட்கும் ஸ்மார்ட்பேண்ட் பிரியர்களுக்கு கர்வ்ட் டிஸ்பிளே, 14 நாட்கள் பேக்கப், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், ஹெல்த் மானிட்டர்கள் போன்ற பீச்சர்களுடன் ஹானர் பேண்ட் 9 (HONOR Band 9) மாடல் வெளியாகியிருக்கிறது.

ஹானர் பேண்ட் 9 அம்சங்கள் (HONOR Band 9 Specifications): காம்பாக்ட் ஹைபர்போலோய்ட் டிசைனில் (Compact Hyperboloid Design), பிரீமியம் லுக்கில் 1.57 இன்ச் (256 x 402 பிக்சல்கள்) கர்வ்ட் அமோலெட் (Cuverd AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 302 பிபிஐ (PPI) டென்சிட்டி மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?

ஆகவே, டிஸ்பிளே பர்ஃபாமென்ஸ் மிரளவிடும்படி இருக்கும். மெட்டாலிக்-லைக் பினிஷிங் கொண்ட ரெயின்போர்ஸ்ட் பாலிமர் ஃபைபர் (Reinforced Polymer Fiber) கேஸ் வருகிறது. சிலிகான் ஸ்ட்ராப் (Silicone Straps) கொண்டிருக்கிறது. மொத்தமாக இந்த மாடலின் டிசைனானது, பட்ஜெட்டிலும் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது.

கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன. பெரும்பாலான சென்சார்கள் (Sensors) மற்றும் ஹெல்த் மானிட்டர்களை (Health Monitors) கொண்டிருக்கிறது. ஆகவே, ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோ சென்சார் (Gyro Sensor), ஹார்ட் ரேட் சென்சார் (Heart Rate Sensor) வருகிறது.

அதேபோல ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor) மற்றும் ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஜாக்கிங், ஸ்விம்மிங், வாக்கிங், ரன்னிங் உள்ளிட்ட 96+ ஸ்போர்ட் மோட்கள் (Sports Modes) வருகின்றன. 4 எம்பி ரேம் கொண்டுள்ளது.

AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?

48 எம்பி மெமரி சப்போர்ட் உள்ளது. இந்த ஹானர் பேண்ட் 9 மாடலில் மேக்னடிக் திம்பிள் சார்ஜிங் (Magnetic Thimble Charging) சப்போர்ட் கொண்ட பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியானது, என்எப்சி (NFC) மோடில் 14 நாட்கள் பேக்கப் மற்றும் ரெகுலர் மோடில் 10 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது.

5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (5ATM Water Resistance) வருகிறது. ஸ்விம்மிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையில் ப்ளூடூத் எல்ஈ வி5.3 (Bluetooth LE v5.3) மற்றும் என்எப்சி (NFC) வருகின்றன. வெறும் 16.3 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 (Android 9.0) மற்றும் ஐஓஎஸ் 11.0 (iOS 11.0) அல்லது அதற்கு மேற்பட ஓஎஸ் சப்போர்ட் உள்ளது.

இந்த மாடலை ஹானர் ஹெல்த் ஆப் (HONOR Health App) மூலம் பயன்படுத்தலாம். கேமரா கன்ட்ரோல் (Camera Controls), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் அப்டேட் (Weather Update) போன்ற ஸ்மார்ட் பீச்சர்கள் (Smart Features) வருகின்றன. இந்த ஹானர் பேண்ட் 9 மாடலில் பர்பிள் (Purple), பிளாக் (Black) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகிறது.

இவ்வளவு பீச்சர்களை கொண்டிருந்தும், ரூ. 2,930ஆக பட்ஜெட்டில் விலை நிர்ணயம் இருக்கிறது. அதேபோல என்எப்சி வெர்ஷன் (NFC Version) விலையானது, ரூ.3,520 ஆக இருக்கிறது. இப்போது, சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் மற்ற நாடுகளில் வெளியாக இருக்கிறது.

ஹானர் நிறுவனம், ஏற்கனவே இந்தியாவில் வரிசையாக புதுப்புது மாடல்களை களமிறங்கி வருவதால், இந்த ஹானர் பேண்ட் 9 மாடலையும் விரைவில் அறிமுகம் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. கம்மியான பட்ஜெட்டில் பக்கா பிரீமியம் லுக் ஸ்மார்ட் பேண்ட் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Band 9 With 4MB RAM, 5ATM Water Resistance, AMOLED Display Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X