சும்மா கிழி.. மலிவு விலையில் 500W சவுண்ட்.. அரளுது சவுண்ட்..SONY-ய மிஞ்சிடும் போலயே.. என்ன டிவைஸ் என்ன விலை?
ஆடியோ சிஸ்டம் (Audio System), ஸ்பீக்கர் (Speaker), ஹோம் தியேட்டர் (Home Theater) மற்றும் சவுண்ட்பார் (Soundbar) என்று ஆடியோ தொடர்பான எந்தவொரு சாதனத்தை யார் வாங்க வேண்டுமென்றாலும், அவர்களின் மனதில் தோன்றும் முதல் பிராண்ட் சோனி (Sony) நிறுவனமாக தான் இருக்க முடியும். சோனி ஆடியோ தயாரிப்புகளுக்கு பெயர் போனது என்பதை தாண்டி, பல வருடங்களாக சந்தையில் ஒரு நம்பகமான பிராண்டாக சோனி திகழ்கிறது. இதனால் தானோ என்னவோ, சோனியின் தயாரிப்பு சாதனங்கள் எல்லாம் மிகவும் காஸ்டலியாக உள்ளன.
பட்ஜெட் பிரியர்களை கவர சோனியிடம் சிறியளவு விருப்பங்கள் மட்டுமே உள்ளது. இதை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளன. அப்படி சரியான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்களில் ஒன்று தான், ஹனிவெல் (Honeywell) பிராண்ட். இந்த பிராண்டு பட்ஜெட் விருப்பத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஸ்பீக்கர்களை வழங்கி வருகிறது. பட்ஜெட் பிரியர்களின் நம்பகமான பிராண்டாக Honeywell திகழ்கிறது.

ஹனிவெல் ட்ரூனோ U7000 500W சவுண்ட்பார் (Honeywell Trueno U7000 500W Soundbar):
இத்தகைய ஹனிவெல் பிராண்ட் தற்போது புதிதாக 2 சக்தி வாய்ந்த சவுண்ட்பார் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஹனிவெல் ட்ரூனோ U7000 500W சவுண்ட்பார் (Honeywell Trueno U7000 500W Soundbar) சாதனம் மற்றும் ஹனிவெல் ட்ரூனோ U4000 240W சவுண்ட்பார் (Trueno U4000 240W soundbar) ஆகிய இரண்டு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனங்களில் அதிக சக்தி கொண்ட சவுண்ட்பாராக 500W சாதனம் வெளிவந்துள்ளது.
புதிய ஹனிவெல் ட்ரூனோ U7000 500W சவுண்ட்பார் (Honeywell Trueno U7000 500W Soundbar) சாதனம் பிரீமியம் டால்பி ஆடியோ அனுபவத்தை 500W சவுண்ட் அவுட்புட் உடன் வழங்குகிறது. இது 5.1 சேனல் சவுண்டு உடன் டால்பி ஆடியோ என்ஹான்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இதனால் நீங்கள் கிரிஸ்டல் கிளியர் ஆடியோ அனுபவத்தை சரவுண்ட் சவுண்ட் உடன் கேட்டு மகிழலாம்.
இந்த புதிய ஹனிவெல் ட்ரூனோ U7000 500W சவுண்ட்பார் (Honeywell Trueno U7000 500W Soundbar) சாதனம் மூன்று 58mm அளவு கொண்ட ஆடியோ டிரைவர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 106.10mm அளவு கொண்ட ஒரு சப்வூப்பர் சாதனமும் இடம்பெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது. இத்துடன், இரண்டு சாட்டிலைட் ஸ்பீக்கர்ஸ் வழங்கப்பட்ள்ளது. இந்த சாட்டிலைட் ஸ்பீக்கர்ஸ்கள் கூட 58mm டிவைவர்களுடன் வருகிறது.
ஹனிவெல் ட்ரூனோ U7000 500W சவுண்ட்பார் விலை (Honeywell Trueno U7000 500W Soundbar Price):
இந்த ஹனிவெல் ட்ரூனோ U7000 500W சவுண்ட்பார் (Honeywell Trueno U7000 500W Soundbar) சாதனத்தை நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்தபடியே முழுமையாக கண்ட்ரோல் செய்ய, இத்துடன் ஒரு ரிமோட் சாதனத்தையும் ஹனிவெல் நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சாதனம் ப்ளூடூத் V5.3+ EDR வயர்லெஸ் ஸ்ட்ரெயிங் அம்சத்தை கொண்டுள்ளது.
இதன் 10 நீங்கள் மீட்டர் இடைவெளியில் கூட இந்த ஸ்பீக்கரை இயக்க முடியும். இந்த ஹனிவெல் ட்ரூனோ U7000 500W சவுண்ட்பார் (Honeywell Trueno U7000 500W Soundbar) சாதனம் ஆறு வகையான ஈக்குவலைசர் செட்டிங்களை கொண்டுள்ளது. இதில் பாப், ராக், ஜாஸ், க்ளாஸிக், கண்ட்ரி மற்றும் எஸ்டிடி போன்ற மோட்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த சாதனத்தை நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹனிவெல் ட்ரூனோ U7000 500W சவுண்ட்பார் (Honeywell Trueno U7000 500W Soundbar) இந்தியாவில் ரூ.15,399 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஹனிவெல் ட்ரூனோ U4000 240W சவுண்ட்பார் (Trueno U4000 240W soundbar) ரூ.8,799 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








