Home
Gadgets

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.14,499 பட்ஜெட்ல 4G டேப்லெட்.. 8200mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் தனியிடம் பிடிப்பதற்காக அடிமட்ட விலைக்கு 8200mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம், ஆட்டோ போகஸ் கேமரா போன்ற பீச்சர்களுடன் எச்எம்டி டி21 (HMD T21) டேப்லெட்டை எச்எம்டி நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. அறிமுக சலுகையுடன் வெளியாகி இருப்பதால், கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் சிப்செட் கொண்ட இந்த எச்எம்டி டி21 டேப்லெட்டின முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

எச்எம்டி டி21 அம்சங்கள் (HMD T21 Specifications): இந்த எச்எம்டி மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கிடைக்கிறது. இதுபோக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்கிரேட் வருகிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் கிடைக்கிறது. கிட்ஸ்களுக்கான மாடலாகவும் இருப்பதால், கூகுள் கிட்ஸ் ஸ்பேஸ் (Google Kids Space) கிடைக்கிறது.

ஆர்டர் பிச்சிக்கும்! ரூ.14,499 பட்ஜெட்ல 4G டேப்லெட்.. 8200mAh பேட்டரி!

டஃப்பென்ட் கிளாஸ் (Toughened Glass) புரொடெக்சன் கொண்ட 10.36 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த எச்எம்டி டி21 டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதுவொரு எல்டிஇ (LTE) + வை-பை (Wi-Fi) மாடலாகும்.

ஆகவே, ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM) கிடைக்கிறது. அதேபோல மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) கொண்ட 8 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8200mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆடியோ பீச்சர்களிலும் பட்டையை கிளப்பும்படி இந்த டேப்லெட் இருக்கிறது. ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் ஓசோ ஆடியோ (OZO Audio) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. மேலும், டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. ஆனால், சார்ஜிங்குக்கு டைப்-சி (Type-C) போர்ட் கிடைக்கிறது.

இந்த எச்எம்டி டி21 டேப்லெட்டில் IP52 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், 4ஜி எல்டிஇ (4G LTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கிடைக்கிறது. பிளாக் ஸ்டீல் (Black Steel) கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. எச்எம்டி தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக ரூ.14,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதுபோக பல்வேறு கூடுதல் சலுகைகளையும் இந்த எச்எம்டி டேப்லெட் கொடுத்து இருக்கிறது. இது கேமிங் பிரியர்களுக்கா பீச்சர்களாக இருக்கிறது.

அதாவது, இந்த டேப்லெட்டை வாங்கும் நபர்கள் ஜூலை 17ஆம் தேதி முதல் கேமிங் பண்டலை அனுகலாம். இதில் 2 மாதங்களுக்கான கிளவுட் கேமிங் சலுகை கிடைக்கும். இது பிளாக்நட் உடன் கிடைக்கிறது. அதேபோல 500+ கேம்களை கொடுக்கிறது. ஆரம்பமே அடிமட்ட விலை, அறிமுக சலுகை மற்றும் கேமிங் சந்தா கொடுக்கப்பதால், வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD T21 With 8GB RAM 8200mAh Battery Launched India At Rs 14499 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X