HMD தாறுமாறு.. மாஸ் காட்ட போகும் புது HMD Tabletகள்.. பட்ஜெட் விலை.. பெரிய டிஸ்பிளே - பேட்டரி.. என்ன மாடல்?
எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் இப்போது புதிதாக மூன்று எச்எம்டி டேப்லெட் (HMD Tablet) சாதனங்களை அதன் போர்ட்போலியோவின் கீழ் அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஒரு மாடல் மிகவும் மலிவு விலையிலும், மற்றொரு மாடல் பட்ஜெட் செக்மென்ட் டேப்லெட்டாகவும் (Budget segment Tablet) இறுதியாக ஒரு டேப்லெட் சாதனம் ஹை-மிட்ரேஞ் டேப்லெட் (High Midrange Tablet) வரிசையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. வரவிருக்கும் புதிய எச்எம்டி டேப்லெட்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை இப்போது இந்த பதிவின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
நோக்கியா (Nokia) நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்ட எச்எம்டி குளோபல் நிறுவனம், இப்போது மிகவும் தீவிரமாக அதன் எச்எம்டி ஸ்மார்ட்போன்களை (HMD smartphone) உருவாக்கி வருகிறதென்பது நமக்கு நன்றாகவே தெரியும். புதிய ஸ்மார்ட்போன்களாக எச்எம்டி நிறுவனம் 5 புதிய மாடலக்ளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு மத்தியில் இப்போது எச்எம்டி நிறுவனம் அதன் டேப்லெட் சாதனங்களையும் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எச்எம்டி டேப்லெட்கள் விரைவில் அறிமுகம் (HMD Tablets Launching Soon):
சமீபத்தில் வெளியான லீக் தகவலின் படி, எச்எம்டி நிறுவனம் பட்ஜெட் செக்மென்ட்டில் புதிதாக 2 டேப்லெட் (HMD budget segment tablet) சாதனங்களையும், உயர் தர மாடலாக ஒரு புதிய மாடலையும் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. பட்ஜெட் விருப்பமாக எச்எம்டி டேப் (HMD TAB) மற்றும் எச்எம்டி டேப் லைட் (HMD TAB Lite) ஆகிய இரண்டு மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதேபோல், எச்எம்டி ஸ்லேட் டேப் (HMD SLATE TAB) என்ற மாடல் ஹை-எண்டு வேரியண்ட் மாடலாக வெளிவரும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. யாரும் எதிர்பார்த்திடாத வகையில், இந்த புதிய எச்எம்டி ஸ்லேட் டேப் டிவைஸ் இன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களும் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
எச்எம்டி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் ஹை-பவர் டேப்லெட் சாதனமான எச்எம்டி ஸ்லேட் டேப் 5ஜி (HMD SlateTAB 5G) டேப்லெட்டில் நாம் 10.6" இன்ச் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD Display) கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் 2K ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வரும்.
எச்எம்டி ஸ்லேட் டேப் 5ஜி (HMD SlateTAB 5G):
இந்த டேப்லெட் சாதனம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது அட்ரினோ 710 (Adreno 710) உடன் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 8ஜிபி ரேம் (RAM) உடன் 128ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் (Storage) ஆதரவை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இது மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) வழியாக கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்தையும் வழங்குகிறது.
இதில் நாம் 13MP பின்பக்க ரியர் கேமரா (rear camera) மற்றும் 8MP முன்பக்க செல்பி கேமரா (Selfie camera) போன்றவற்றை எதிர்பார்க்கலாம். இது 9250mAh பேட்டரி (battery) உடன் 30W சார்ஜிங் (Charging) ஆதரவை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இணைப்பு அம்சங்களை பொறுத்தவரையில், இது 5ஜி (5G) ஆதரவு, ப்ளூடூத் 5.2 (Bluetooth), வைஃபை 6E (WiFi 6E) மற்றும் NFC போன்ற ஆதரவை பெரும்.
இந்த எச்எம்டி ஸ்லேட் டேப் ஆண்ட்ராய்டு 14 இயந்துதளத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் டூயல் ஸ்பீக்கர் (Dual Speakers), 3 மைக் (MIC), பின் கனெக்டர் (PIN Connector), ஸ்டைலஸ் பென் (Stylus Pen) மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் (Audio Jack) போன்றவற்றையும் பெரும். இதன் விலை விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இது ரூ. 24999 விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications