குருநாதா இங்கயும் வந்துடீங்களா.. 5 நாள் பேட்டரி, IP68 ரேட்டிங்.. 2 புதிய NOKIA HMD ஸ்மார்ட் வாட்ச்கள்!
நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி (HMD) நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அது எச்எம்டி வாட்ச் X1 மற்றும் எச்எம்டி வாட்ச் P1 மாடல்கள் ஆகும். இரண்டுமே அட்வான்ஸ்டு ஸ்மார்ட்வாட்ச் அம்சங்களை விட பேஸிக் ஆன பிட்னஸ் கண்காணிப்பு மற்றும் நீண்ட பேட்டரி லைஃப்பில் கவனம் செலுத்துகின்றன
எச்எம்டி வாட்ச் X1 மாடலின் முக்கிய அம்சங்கள்:
- 466 × 466 ரெசல்யூஷன் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரட்னஸ் உடனான 1.43-இன்ச் சர்குலர் AMOLED டிஸ்பிளே
- IP68 ரேட்டிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 5 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்
-இதய துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் சென்சார்கள், தூக்க கண்காணிப்பு மற்றும் 700 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- நீண்ட கால செயலற்ற தன்மைக்கான எச்சரிக்கைகள்
- தண்ணீர் குடிக்க நினைவூட்டல்கள்

எச்எம்டி வாட்ச் P1 மாடலின் முக்கிய அம்சங்கள்:
- பெரிய 1.83-இன்ச் செவ்வக LCD டிஸ்பிளே
- 284 × 240 ரெசல்யூஷன் மற்றும் 550 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- IP67 ரேட்டிங்
- தூசி மற்றும் நீர் வெளிப்பாட்டிலிருந்து பாதுகாப்புகப்படுகிறது, ஆனால் நீச்சலுக்கு ஏற்றதல்ல.
- பேட்டரி லைஃப் 4 நாட்கள் வரை கிடைக்கும்
- 700 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- தூக்க கண்காணிப்பு அம்சம் அணுக கிடைக்கும்
எச்எம்டி நிறுவனத்தின் இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களுமே GPS அல்லது NFC-ஐ ஆதரிக்கவில்லை, அதாவது செயல்பாடுகளை வெளியில் சுயாதீனமாக கண்காணிக்க முடியாது. பெரும்பாலும் பல அம்சங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படுவதை பெரிதும் நம்பியிருக்கின்றன. மேலும் இன்னுமும் இந்த இரண்டு மாடலுக்கும் விலை நிர்ணயம் அல்லது வெளியீட்டு காலக்கெடுவை எச்எம்டி இன்னும் அறிவிக்கவில்லை.
சமீபத்தில் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் ஒரே நேரத்தில் 6 புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் மாடல்களை அறிமுகம் செய்து இருந்ததும் உங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் 6 இயர்பட்ஸ் மாடல்களுமே ஒரே சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது எச்எம்டி டப் சீரீஸ் (HMD Dub series) ஆகும்.
அவைகள் - எச்எம்டி டப் 50 (HMD Dub P50), எச்எம்டி டப் எக்ஸ்50 (HMD Dub X50), எச்எம்டி டப் எக்ஸ்50 ப்ரோ (HMD Dub X50 Pro), எச்எம்டி டப் எஸ்60 (HMD Dub S60), எச்எம்டி டப் பி60 (HMD Dub P60) மற்றும் எச்எம்டி டப் பி70 (HMD Dub P70) மாடல்கள் ஆகும்.
விலை விவரங்கள்: இப்போதைக்கு எச்எம்டி நிறுவனமானது பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் வேறு சில பிராந்தியங்களில் மட்டுமே இந்த 6 மாடல்களை அறிவித்துள்ளது. இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற விவரங்கள் இல்லை. மேலும் 6 மாடல்களில் 3 மாடல்களின் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
எச்எம்டி டப் பி60 இயர்பட்ஸ் மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2155 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்எம்டி டப் எஸ்60 இயர்பட்ஸ் மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2874 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்எம்டி டப் எக்ஸ்50 இயர்பட்ஸ் மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.3053 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








