60 மணிநேரம் பேட்டரி.. NOKIA HMD அதகளம்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஒரே நேரத்தில் 6 இயர்பட்ஸ் அறிமுகம்!
நோக்கியா (NOKIA) நிறுவனத்தின் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது - தொடர்ச்சியாக புதிய பீச்சர் மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன் மாடல்களை மட்டுமே அறிமுகம் செய்தால்.. வேலைக்கு ஆகாது என்பதை புரிந்துகொண்டுள்ளது போல் தெரிகிறது.
எச்எம்டி க்ளோபல் நிறுவனம் ஆனது ஒரே நேரத்தில் மொத்தம் 6 புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் மாடல்களை அறிமுகம் செய்து அதகளம் செய்துள்ளது. அதுவும் இந்த 6 இயர்பட்ஸ் மாடல்களுமே ஒரே சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது எச்எம்டி டப் சீரீஸ் (HMD Dub series) ஆகும்.

அவைகள் - எச்எம்டி டப் 50 (HMD Dub P50), எச்எம்டி டப் எக்ஸ்50 (HMD Dub X50), எச்எம்டி டப் எக்ஸ்50 ப்ரோ (HMD Dub X50 Pro), எச்எம்டி டப் எஸ்60 (HMD Dub S60), எச்எம்டி டப் பி60 (HMD Dub P60) மற்றும் எச்எம்டி டப் பி70 (HMD Dub P70) மாடல்கள் ஆகும்.
எச்எம்டி-யின் இந்த சமீபத்திய டப் சீரீஸ் இயர்பட்ஸ்-ன் டாப் எண்ட் மாடல் டப் எக்ஸ்50 ப்ரோ ஆகும். இது டப் பிளாட்டினம் சவுண்ட் மற்றும் ஹை-ஃபை டிஎஸ்பி, தெளிவான அழைப்புகளுக்கான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் இஎன்சி (ENC) ஆகியவற்றுடன் வருகிறது. சார்ஜிங் கேஸ் வழியாக 60 மணிநேர பேட்டரி லைஃப்பையும் வழங்குகிறது.
டப் எக்ஸ்50 மாடல் பிளாட்டினம் சவுண்ட் மற்றும் இஎன்சி உடன் வருகிறது. ஆனால் மொத்த பிளேடைமை சுமார் 70 மணிநேரமாக அதிகரிக்கிறது. இது பாஸ்ட் சார்ஜிங், லோ லேடன்சி ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. ஏஎன்சி இல்லாமல் சிறந்த ஆடியோவை விரும்புவோருக்கு, டப் எஸ்60 ஆனது ஆடியோ ஆப்பின் மூலம் சரிசெய்யக்கூடிய பல EQ மோட்களுடன் டால்பி ஆடியோ ஆதரவை வழங்குகிறது. இது சுமார் 35 மணிநேர பிளேபேக்கை வழங்குகிறது
இதற்கிடையில், டப் பி70 மற்றும் பி60 மாடல்கள் இரண்டும் ENC மற்றும் பாஸ்-பூஸ்டட் பிளாட்டினம் சவுண்ட் உடன் மேம்படுத்தப்பட்ட பாஸ் மற்றும் திடமான காலிங் குவாலிட்டியில் அதிக கவனம் செலுத்துகின்றன. பி70 மாடல் ஆனது ANC மற்றும் 35 மணிநேரம் வரை மொத்த பிளேபேக்கை வழங்குகிறது. அதே நேரத்தில் பி60 சுமார் 30 மணிநேர பிளேபேக், லோ லேடன்சி மோ மற்றும்வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவை வழங்குகிறது.
இந்த சீரீஸை முழுமையாக்குவது காம்பாக்ட் ஆன டப் பி50 மாடல் ஆகும், இது சாதாரண பயனர்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்றது, சுமார் 25 மணிநேர பேட்டரி லைப், தெளிவான அழைப்புகளுக்கான ENC மற்றும் எளிதில் பாக்கெட்டில் வைக்கக்கூடிய டிசைனையும் கொண்டுள்ளது. மேலும் இந்த 6 மாடல்களுமே வியர்வை எதிர்ப்பிற்கான IPX4 ரேட்டிங்கை கொண்டுள்ளன.
விலை விவரங்கள்: இப்போதைக்கு எச்எம்டி நிறுவனமானது பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் வேறு சில பிராந்தியங்களில் மட்டுமே இந்த 6 மாடல்களை அறிவித்துள்ளது. இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற விவரங்கள் இல்லை. மேலும் 6 மாடல்களில் 3 மாடல்களின் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
எச்எம்டி டப் பி60 இயர்பட்ஸ் மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2155 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்எம்டி டப் எஸ்60 இயர்பட்ஸ் மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2874 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்எம்டி டப் எக்ஸ்50 இயர்பட்ஸ் மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.3053 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








