Home
Gadgets

உலகின் முதல் 150-இன்ச் டிவி.. 1டிபி மெமரி.. டால்பி விஷன்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்? என்ன விலை?

ஹைசென்ஸ் நிறுவனம் உலகின் முதல் 150-இன்ச் லேசர் டிவியை அறிமுகம் செய்தது. அதாவது ஹைசென்ஸ் நிறுவனம் தற்போது ஹைசென்ஸ் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்1 அல்ட்ரா (Hisense Xplorer X1 Ultra) எனும் பெயரில் 100-இன்ச், 120-இன்ச், 139-இன்ச், 150-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஹைசென்ஸ் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்1 அம்சங்கள் (Hisense Xplorer X1 Ultra Laser TV Specifications): டூயல் எம்சிஎல்39 ட்ரை கலர் ஆர்ஜிபி லேசர் லைட் எஞ்சினை (dual MCL39 tri-color RGB laser light) கொண்டு இந்த புதிய 100-இன்ச், 120-இன்ச், 139-இன்ச், 150-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளே 1000 நிட்ஸ் ஃபுல் பிரைட்னஸ் கொடுக்கும்.

உலகின் முதல் 150-இன்ச் டிவி.. 1டிபி மெமரி.. டால்பி விஷன்.. என்ன விலை?

அதேபோல் BT.2020 கலர் காமட் (Color Gamut), 5000:1 கான்ட்ராஸ்ட் ரேஸியோ, டால்பி விஷன், உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களுடன் ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) சப்போர்ட் வழங்குகின்றன இந்த புதிய டிவிகள். பின்பு எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவும் ஹைசென்ஸ் Xplorer எக்ஸ்1 மாடல்களில் உள்ளன.

டிஎம்டி சிப் (DMD chip) ஆதரவுடன் இந்த புதிய ஹைசென்ஸ் டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இது துல்லியமான வீடியோக்களை பார்க்க அனுமதிக்கிறது. மேலும் இந்த டிவிகளின் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹைசென்ஸ் நிறுவனம்.

சக்திவாய்ந்த மீடியாடெக் எம்டி9655 சிப்செட் உடன் இந்த ஹைசென்ஸ் Xplorer எக்ஸ்1 டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஹைசென்ஸ் டிவி மாடல்கள்.

ஹர்மன் கார்டன் நிறுவன்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 9.1.4-சேனல் ஆடியோ சிஸ்டம் கொண்டுள்ளது இந்த புதிய டிவிகள். குறிப்பாக 206W வரை சவுண்ட் அவுட்புட் வழங்கும் இந்த டிவிகள். மேலும் டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட ஆடியோ அம்சங்களும் இந்த டிவிகளில் உள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை தரும் என்றே கூறலாம்.

டீப்சீக் ஏஐ (DeepSeek AI) அம்சங்களுடன் ஹைசென்ஸ் Xplorer எக்ஸ்1 டிவிகள் வெளிவந்துள்ளன. பின்பு வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவையும் வழங்குகின்றன இந்த புதிய டிவிகள். பின்பு வைஃபை 7, 4கே மேக்ஸ் ஹை-பிட்ரேட் பிளேபேக் (4K MAX high-bitrate playback) வசதிகளுடன் இந்த டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எச்டிஎம்ஐ 2.1 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், ஈதர்நெட் லேன், ஆப்டிகல், கோஆக்சியல் ஆடியோ அவுட், ஆண்டெனா இன்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஹைசென்ஸ் Xplorer எக்ஸ்1 மாடல்களில் உள்ளன. டேப்-டு-காஸ்ட் ஸ்மார்ட்போன் மிரரிங் ஆதரவும் வழங்குகிறது இந்த டிவிகள். பின்பு இந்த டிவிகள் உடன் ரிமோட் ஒன்றும் கிடைக்கும்.

உலகின் முதல் 150-இன்ச் டிவி.. 1டிபி மெமரி.. டால்பி விஷன்.. என்ன விலை?

ஆனால் ஹைசென்ஸ் Xplorer எக்ஸ்1 டிவி மாடல்கள் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவிகள் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய டிவிகளின் விலையைப் பார்க்கலாம்.

ஹைசென்ஸ் Xplorer எக்ஸ்1 விலை:

ஹைசென்ஸ் Xplorer எக்ஸ்1 150-இன்ச் டிவியின் விலை 99,999 yuan (இந்திய மதிப்பில் ரூ,12,39,335)
ஹைசென்ஸ் Xplorer எக்ஸ்1 139-இன்ச் டிவியின் விலை 79,999 yuan (இந்திய மதிப்பில் ரூ,9,91,466)
ஹைசென்ஸ் Xplorer எக்ஸ்1 120-இன்ச் டிவியின் விலை 69,999 yuan (இந்திய மதிப்பில் ரூ,8,67,531)
ஹைசென்ஸ் Xplorer எக்ஸ்1 100-இன்ச் டிவியின் விலை 49,999 yuan (இந்திய மதிப்பில் ரூ,6,19,661)

photo credit: gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Hisense Xplorer X1 Ultra Laser TV launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X