Home
Gadgets

இந்தியாவில் புதிய 100 இன்ச் மற்றும் 116 இன்ச் டிவிகளை அறிமுகம் செய்த Hisense.. வியக்க வைக்கும் விலை..

ஹைசென்ஸ் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனத்தின் டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பல மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஹைசென்ஸ் நிறுவனம் தனது புதிய ஹைசென்ஸ் யுஎக்ஸ் யுஎல்இடி சீரிஸ் (Hisense UX ULED Series) டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஹைசென்ஸ் யுஎக்ஸ் யுஎல்இடி சீரிஸ் ஆனது 100 இன்ச் மற்றும் 116 இன்ச் என இரண்டு அளவுகளில் வாங்க கிடைக்கும். இப்போது இந்த புதிய டிவிகளின் அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

புதிய 100 இன்ச் மற்றும் 116 இன்ச் டிவிகளை அறிமுகம் செய்த Hisense..

ஹைசென்ஸ் யுஎக்ஸ் யுஎல்இடி சீரிஸ் அம்சங்கள் (Hisense UX ULED Series Specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்ட 100 இன்ச் மற்றும் 116 இன்ச் டிவி மாடல்கள் 8000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 95% BT.2020 கலர் கவரேஜ், லோவ் ப்ளூ லைட் டெக்னாலஜி (low blue light technology)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த புதிய டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.

குறப்பாக எச்7 பிக்சர் குவாலிட்டி சிப்செட் (H7 picture quality chipset) கொண்டுள்ளன ஹைசென்ஸ் யுஎக்ஸ் யுஎல்இடி சீரிஸ். எனவே இந்த டிவிகளில் சிறந்த கிளாரிட்டி மற்றும் கலர் டெப்த் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஹை-வியூ AI எஞ்சின் X ஆதரவுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளது. தெளிவான வீடியோக்களை பார்க்க உதவுகிறது.

6.2.2-சேனல் சினிஸ்டேஜ் X சரவுண்ட் சிஸ்டத்துடன் (6.2.2 channel CineStage X Surround system) புதிய ஹைசென்ஸ் யுஎக்ஸ் யுஎல்இடி சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் டாப்-ஃபயரிங் ஸ்பீக்கர்கள் மற்றும் பில்ட்-இன் சப்வூப்பர் (Built-in Subwoofer) ஆதரவுகளும் இந்த புதிய டிவிகளில் உள்ளன. எனவே இதன் மூலம் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவு கொண்டுள்ளது புதிய ஹைசென்ஸ் டிவிகள். பின்பு 3டி கலர் மாஸ்டர் ப்ரோ ( 3D Colour Master PRO), டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ), எச்டிஆர்10பிளஸ் (HDR10+), ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த புதிய 100 இன்ச் மற்றும் 116 இன்ச் டிவிகளில் உள்ளன.

VIDAA ஸ்மார்ட் ஓஎஸ் மூலம் இந்த புதிய டிவிகள் இயங்குகின்றன. குறிப்பாக இந்த டிவிகளில் 28 மொழிகளுக்கான ஆதரவு மற்றும் எட்டு ஆண்டு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த டிவிகளில் உள்ளன. அதுவும் 165 ஹெர்ட்ஸ் கேம் மோட் அல்ட்ரா, விஆர்ஆர், ஏஎம்டி ப்ரீசின்க் பிரீமியம் ப்ரோ (AMD FreeSync Premium Pro) உள்ளிட்ட பல சிறப்பான கேமிங் அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.

புதிய 100 இன்ச் மற்றும் 116 இன்ச் டிவிகளை அறிமுகம் செய்த Hisense..

USB-C ரீசார்ஜ் செய்யக்கூடிய ரிமோட்டைக் கொண்டுள்ளன புதிய ஹைசென்ஸ் யுஎக்ஸ் யுஎல்இடி சீரிஸ் மாடல்கள். மற்ற டிவிகளை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் இந்த ஹைசென்ஸ் யுஎக்ஸ் யுஎல்இடி சீரிஸ் மாடல்களில் உள்ளன.

அதேபோல் இந்த புதிய டிவிகள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும். ஹைசென்ஸ் யுஎக்ஸ் யுஎல்இடி சீரிஸ் 100 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.9,99,999-ஆக உள்ளது. பின்பு இதன் 116-இன்ச் மாடலின் விலை ரூ.29,99,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Hisense UX ULED Series launched in india: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X