Home
Gadgets

வீடு தியேட்டரி மாதிரி அதிரும்.. 75 இன்ச் RGB MiniLED டிவி.. 89W டால்பி அட்மோஸ் ஆடியோ.. டால்பி விஷன் வீடியோ!

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களுடன் ஹைசென்ஸ் யூஆர்8எஸ் ஆர்ஜிபி மினி எல்இடி டிவி (Hisense UR8S RGB MiniLED TV) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு, பில்ட்-இன் சப்வூப்பர், வைடா டிவி ஓஎஸ் உள்ளிட்ட பீச்சர்களில் பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த டிவியின் பீச்சர்களை முதலில் பார்க்கலாம்.

ஹைசென்ஸ் யூஆர்8எஸ் ஆர்ஜிபி மினி எல்இடி டிவி அம்சங்கள் (Hisense UR8S RGB MiniLED TV Specifications): 55 இன்ச் டிஸ்பிளே, 65 இன்ச் டிஸ்பிளே மற்றும் 75 இன்ச் டிஸ்பிளே கொண்ட 3 மாடல்கள் இருக்கின்றன. இதில் ஆர்ஜிபி மினிஎல்இடி (RGB MiniLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.

வீடு தியேட்டரி மாதிரி அதிரும்.. 75 இன்ச் RGB டிவி.. 89W டால்பி ஆடியோ!

ஹை-வியூ ஏஐ என்ஜின் ஆர்ஜிபி (Hi-View AI Engine RGB) கிடைக்கிறது. 180Hz நேட்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆன்டி-ரெஃப்ளெக்சன் (Anti-Reflection) மற்றும் கிளார் ஃப்ரீ (Glare-Free) டிஸ்பிளேவை இந்த ஹைசென்ஸ் யூஆர்8எஸ் ஆர்ஜிபி மினி எல்இடி டிவி கொடுத்து இருக்கிறது.

கேமிங் பிரியர்களுக்காக ஏம்டி ஃப்ரீசின்க் பிரீமியம் ப்ரோ (AMD FreeSync Premium Pro), விஆர்ஆர் (VRR), ஏஎல்எல்எம் (ALLM) கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டிஆர் 10பிளஸ் கேமிங் (HDR 10+ Gaming) கிடைக்கிறது. மேலும், டால்பி விஷன் கேமிங் (Dolby Vision Gaming) மற்றும் கேம் பார் (Game Bar) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ) உள்ளது.

இதுபோக எச்எல்ஜி (HLG) மற்றும் ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ப்ரீமியம் டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப 2.1.2 சேனல் சப்போர்ட் கொண்ட 89W ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் மல்டி-சேனல் சரவுண்ட் சவுண்ட் (Multi Channel Surround Sound) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு உள்ளது.

பில்ட்-இன் சப்வூப்பர் (Built-in Subwoofer) கிடைப்பதால், ப்ரீமியம் ஆடியோ அவுட் கிடைக்கும். வைடா டிவி ஓஎஸ் (VIDAA TV OS) கிடைக்கிறது. ஆகவே, வைடா வாய்ஸ் (VIDAA Voice) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக பில்ட்-இன் அலெக்சா (Built-in Alexa) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த ஹைசென்ஸ் யூஆர்8எஸ் ஆர்ஜிபி மினி எல்இடி டிவி விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ஏஐ பிக்சர் (AI Picture), ஏஐ ஸ்போர்ட்ஸ் மோட் (AI Sports Mode), ஏஐ ஆர்ஜிபி லைட் சென்சார் (AI RGB Light Sensor) கிடைக்கிறது. கனெக்டிவிட்டிகளை பார்க்கையில், வை-பை 6 இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஈதர்நெட் (Ethernet), ஆப்டிகல் ஆடியோ (Optical Audio) உள்ளிட்டவை வருகின்றன. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடிகள் உள்ளன.

ரூ.1,19,990 விலையில் இருந்து இந்த ஹைசென்ஸ் யூஆர்8எஸ் ஆர்ஜிபி மினி எல்இடி டிவி கிடைக்க இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யலாம். ரீடெயில் ஸ்டோர்களிலும் கிடைக்கும். அறிமுக சலுகையாக ரூ.10,000 கேஷ்பேக் கிடைக்கிறது. 2 வருடங்களுக்கு வாரண்டி கிடைக்கிறது. ஜீரோ டவுன் பேமெண்ட் சலுகை கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Hisense UR8S RGB MiniLED TV Series With 180Hz Game Mode Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X