Home
Gadgets

பழைய TV-க்கு கும்பிடு.. சப் வூப்பருடன் 100 இன்ச் மினி LED டிவி.. டால்பி விஷன்.. புது Hisense TV.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட் டிவி மார்கெட்டில் ஹை-கியூஎல்இடி கலர் டெக்னாலஜி (Hi-QLED Colour Technology) கொண்ட மாடலாக ஹைசென்ஸ் யு7எஸ்இ 4கே மினி-எல்இடி டிவி (Hisense U7SE 4K Mini-LED TV) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பில்ட்-இன் சப்வூப்பர், ஹை-வியூ ஏஐ என்ஜின் உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த ஹைசென்ஸ் யு7எஸ்இ 4கே மினி-எல்இடி டிவியின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங், சோனி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அதைவிட மலிவான விலைக்கு பிரீமியம் பீச்சர்களை கொடுத்து வரும் நிறுவனமாக ஹைசென்ஸ் இருக்கிறது. இப்போது, நேட்டிவ் 144Hz கேம் மோட் (Native 144Hz Game Mode), பில்ட்-இன் சப் வூப்பர் (Built-in Sub Woofer), ஹை-வியூ என்ஜின் (Hi-view AI Engine) மற்றும் வாய்ஸ் கான்ட்ரோல்களுடன் (Voice Control) யு7எஸ்இ சீரிஸ் மாடல்களை களமிறக்கி இருக்கிறது.

பழைய TV-க்கு கும்பிடு.. சப் வூப்பருடன் 100 இன்ச் மினி LED டிவி!

இதில் 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 100 இன்ச் டிஸ்பிளே கொண்ட மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. கிரிஸ்டல் கிளியர் கிளாரிட்டி, ஹைய்யர் பிரைட்னஸ், கலர் ரீபுரொடெக்சன் கொடுக்கும்படி ஹை-கியூஎல்இடி கலர் டெக்னாலஜி கொடுத்துள்ளது. கேமிங் பிரியர்களுக்காக 165Hz கேம் மோட் கிடைக்கிறது. இது 100 இன்ச் மாடலில் மட்டுமே கிடைக்கும். மற்ற மாடல்களில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ளலாம்.

அதேபோல விஆர்ஆர் (VRR), லோவ் லேட்டன்சி (Low Latency) கிடைக்கிறது. பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் கொடுக்கும்படி எச்டிஆர்10பிளஸ் அடாப்டிவ் (HDR10+ Adaptive), டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ) மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) போன்ற பீச்சர்களையும் இந்த ஹைசென்ஸ் யு7எஸ்இ 4கே மினி-எல்இடி டிவி மாடல்கள் கொடுத்து இருக்கின்றன. முழு பீச்சர்களும் எப்படியென்பதை பார்ப்போம்.

ஹைசென்ஸ் யு7எஸ்இ 4கே டிவி அம்சங்கள் (Hisense U7SE 4K TV Specifications): வைடா ஸ்மார்ட் ஓஎஸ் (VIDAA Smart OS) கொண்ட மாடலாக இருக்கிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களின் சப்போர்ட் கொடுக்கும். ஆகவே, பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப்களை பயன்படுத்தலாம். 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 100 இன்ச் டிஸ்பிளே உள்ளது.

இதில் 100 இன்ச் மாடலில் மட்டும் ஹை-வியூ ஏஐ என்ஜின் ப்ரோ (Hi-View AI Engine Pro) கிடைக்கிறது. மற்ற மாடல்களில் ஹை-வியூ ஏஐ என்ஜின் மட்டும் கிடைக்கிறது. 144Hz நேட்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. ரியல் டைம் பிக்சர் ஆப்டிமைசேஷன் ( Real-time Picture Optimization), ஏஐ ஆர்ஜிபி லைட் சென்சார் (AI RGB Light Sensor) போன்ற பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. எச்எல்ஜி (HLG) கொடுக்கப்பட்டு உள்ளது.

பில்ட்-இன் சப் வூப்பர் கொண்ட மாடலாக இருப்பதால், ஆடியோ குவாலிட்டி பிரீமியமாக இருக்கும். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுத்துள்ளது. கேமிங் பிரியர்களுக்கு ஏஎம்டி ப்ரீசின்க் பிரீமியம் சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ பிக்சர் சப்போர்ட் உள்ளது. ஆகவே, ஏஐ கிளாரிட்டி அப்ஸ்கேலிங், ஏஐ ஆப்ஜெக்ட் டிடெக்சன், ஏஐ கலர் பூஸ்டர் உள்ளிட்டவை கிடைக்கிறது.

இந்த ஹைசென்ஸ் யு7எஸ்இ 4கே மினி-எல்இடி டிவியின் ஆரம்ப விலை ரூ.63,990 ஆக இருக்கிறது. ஹைசென்ஸ் தளத்திலும், ஆஃப்லைன் ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. மற்ற தளங்களிலும் கிடைக்க இருக்கிறது. லேட்டஸ்ட் டிஸ்பிளே மற்றும் ஆடியோ டெக்னாலஜிகளுடன் பட்ஜெட்டில் டிவி வாங்க திட்டமிட்டால், இந்த சீரிஸ் பக்காவாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Hisense U7SE 4K 144Hz Mini-LED TV Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X