ஹோம் தியேட்டர் எதுக்கு? 100 இன்ச் MiniLED டிவி.. டால்பி அட்மோஸ்.. டால்பி விஷன்.. 50W ஆடியோ அவுட்.. எந்த மாடல்?
ஹோம் தியேட்டருக்கு நிகரான 100 இன்ச் மினி-எல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், 50W ஆடியோ அவுட் (ஸ்பீக்கர், சப்வூப்பர்), டால்பி அட்மோஸ், டால்பி விஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ஹைசென்ஸ் யு7கியூ சீரிஸ் (Hisense U7Q Series) டிவிகள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன. இந்த பீச்சர்களுக்கு ஏற்ப அதிக பட்ஜெட் இல்லாமல், மிட்-ரேஞ்ச் விலைக்கு விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இந்த ஹைசென்ஸ் யு7கியூ சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை பார்ப்போம்.
55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் டிஸ்பிளே கொண்ட மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுபோக 100 இன்ச் டிஸ்பிளே கொண்ட டாப்-எண்ட் மாடலும் களமிறங்கி இருக்கிறது. இதில் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஆடியோ பீச்சர்களை தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, அதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஹைசென்ஸ் யு7கியூ சீரிஸ் அம்சங்கள் (Hisense U7Q Series Specifications): 4K அல்ட்ரா எச்டி (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் கொண்ட மினி எல்இடி (Mini LED) டிஸ்பிளே கிடைக்கிறது. 100 இன்ச் மாடலில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மற்ற டிஸ்பிளே மாடல்களில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் ஐக்யூ (Dolby Vision IQ) கிடைக்கிறது. மேலும், கேமிங் பிரியர்களுக்கான எச்எல்ஜி (HLG) மட்டுமல்லாமல், ஏஎல்எல்எம் (ALLM), விஆர்ஆர் (VRR) மற்றும் எம்இஎம்சி (MEMC) கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களை பார்க்கையில், ஏஐ ஸ்மூத் மோஷன் (AI Smooth Motion) மற்றும் ஏஐ லைட் சென்சார் (AI Light Sensor) வருகிறது.
மேலும், ஏஐ எச்டிஆர் அப்ஸ்கேலர் (AI HDR Upscaler) மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான ஏஐ ஸ்போர்ட்ஸ் மோட் (AI Sports Mode) வருகிறது. டிஸ்பிளேவில் குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology) மற்றும் வைடு கலர் காமட் (Wide Color Gamut) எதிர்பார்க்கலாம். ஆகவே, ஒட்டுமொத்தமாகவே டிஸ்பிளேவில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொடுக்கிறது.
இந்த ஹைசென்ஸ் யு7கியூ சீரிஸ் மாடல்களின் ஆடியோவை பார்க்கையில், 100 இன்ச் மாடலில் 50W சவுண்ட் அவுட் கிடைக்கிறது. இதில் 15W அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் மற்றும் 20W அவுட் கொண்ட ஒரு சப்வூப்பர் கிடைக்கிறது. அதேபோல மற்ற மாடல்களில் 40W சவுண்ட் அவுட் வருகிறது. இதில் 10W அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் மற்றும் 20W சப்வூப்பர் வருகிறது.
இந்த ஆடியோவுக்கு டால்பி அட்மோஸ் (Dolby Atoms), ஆடியோ ஈகுவலைசர் (Audio equalizer) சப்போர்ட் உள்ளது. மேலும், என்ஹான்ஸ்டு ஏஆர்சி, தியேட்டர் உள்ளிட்ட மல்டிபிள் சவுண்ட் மோட்களும் (Multiple Sound Modes) கிடைக்கின்றன. விஐடிஏஏ டிவி ஓஎஸ் (VIDAA TV OS) மற்றும் ஹை-வியூ ஏஐ என்ஜின் (Hi-View AI Engine) சப்போர்ட் கிடைக்கிறது.
இதில் வாய்ஸ் கன்ட்ரோல், அமேசான் அலெக்சா, ஆப்ஸ் ஸ்டோர் போன்ற வழக்கமான பீச்சர்கள் இருக்கின்றன. யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, ப்ளூடூத், வை-பை போன்ற அனைத்து கனெக்டிவிட்டியும் வருகிறது. 55 இன்ச் மாடலின் விலை ரூ. 59,999ஆகவும், 65 இன்ச் மாடலின் விலை ரூ.79,999ஆகவும் இருக்கிறது. மற்ற மாடல்களின் விலை விரைவில் தெரியவரும். அமேசானில் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








