வீடே தியேட்டர் தான்.. 200 இன்ச்.. டால்பி அட்மாஸ்.. Hisense புரொஜெக்டர் அறிமுகம்.. தலைசுற்ற வைக்கும் விலை..
ஹைசென்ஸ் (Hisense) நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான மற்றும் தரமான அம்சங்களுடன் சாதனங்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளன. இந்நிலையில் ஹைசென்ஸ் எம்2 ப்ரோ ப்ரொஜெக்டர் (Hisense M2 Pro Projector) மாடலை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.
ஹைசென்ஸ் எம்2 ப்ரோ ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Hisense M2 Pro Projector Specifications): ஏஐ 4கே ரெசல்யூஷன் (4K resolution) ஆதரவுடன் இந்த புதிய ஹைசென்ஸ் எம்2 ப்ரோ ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் மேம்பட்ட டிஸ்பிளே அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது.

அதாவது ஏஐ அப்ஸ்கேலர் (AI Upscaler), ஏஐ நாய்ஸ் ரெடக்சன் (AI Noise Reduction) உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்கள் இந்த ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதன் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும். பின்பு இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
டிஎல்பி சிஸ்டம் (DLP system) மற்றும் 2.07 மில்லியன் மைக்ரோமிரர்களைக் (micromirrors) கொண்டுள்ளது இந்த புதிய ஹைசென்ஸ் எம்2 ப்ரோ ப்ரொஜெக்டர் மாடல். மேலும் இந்த புதிய ஹைசென்ஸ் புரொஜெக்டரில் 200 இன்ச் வரையில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். குறிப்பாக இந்த புரொஜெக்டர் சிறந்த மற்றும் பெரிய திரை அனுபவத்தை வழங்கும். எனவே 85 இன்ச் மற்றும் 100 இன்ச் அளவு கொண்ட ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
அதேபோல் துடிப்பான மற்றும் துல்லியமான நிறங்களை வழங்க தனித்தனி சிவப்பு (red), பச்சை (green), நீல(blue) ஆகிய ப்யூர் டிரிபிள் கலர் லேசர் தொழில்நுட்பத்தை (Pure Triple Color Laser technology) பயன்படுத்துகிறது இந்த அசத்தலான ஹைசென்ஸ் எம்2 ப்ரோ ப்ரொஜெக்டர் மாடல்.
1.0 முதல் 1.3 த்ரோவ் ரேசியோ (Throw Ratio) மற்றும் ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஹைசென்ஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. இது டிஜிட்டல் ஜூம் போல் இல்லாமல் மிகவும் துல்லியமாகப் படத்தின் அளவை மாற்ற அனுமதிக்கிறது. குறிப்பாக ஆப்டிகல் ஜூம் இதில் இருப்பதால் நம்பி வாங்கலாம்.
அதேபோல் ஆட்டோ ஃபோகஸ் (auto focus), ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் (auto keystone correction) ஆதரவுகளும் ஹைசென்ஸ் எம்2 ப்ரோ ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. வெள்ளை அல்லாத சுவர்களில் கூட இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும். அதாவது இதற்குத் தகுந்த 7-மோட் வால் கலர் adaptation சிஸ்டம் உள்ளது.
பில்ட்-இன் டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது. குறிப்பாக இதன் மூலம் சிறந்த ஆடியோ அனுபம் கிடைக்கும். VIDAA ஸ்மார்ட் ஓஎஸ் மூலம் இந்த ப்ரொஜெக்டர் இயங்குகிறது. குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்கள் இந்த ஓஎஸ் மூலம் கிடைக்கும்.

வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), யூட்யூப், டிஸ்னி பிளஸ் போன்ற ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளையும் வழங்குகிறது இந்த ப்ரொஜெக்டர். அதேபோல் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களும் இந்த ஹைசென்ஸ் எம்2 ப்ரோ ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது.
ஆனால் ஹைசென்ஸ் எம்2 ப்ரோ மாடல் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ஹைசென்ஸ் எம்2 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். பின்பு இந்த புதிய ஹைசென்ஸ் ப்ரொஜெக்டர் மாடலின் விலை $1,299.99 (இந்திய மதிப்பில் ரூ.1,11,526) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications