Home
Gadgets

TV வாங்கலயோ புது TV.. Samsung-ஐ தட்டி தூக்குற விலையில் 55, 65, 75, 85-இன்ச் Hisense டிவிகள் அறிமுகம்!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாகவும், ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கான தனது பிரீமியம் டிவி சீரீஸை விரிவுபடுத்தும் விதமாகவும், ஹைசென்ஸ் (Hisense) நிறுவனமானது இந்தியாவில் அதன் இ8எஸ் யுஎல்இடி மினி-எல்இடி டிவி சீரீஸை (E8S ULED Mini-LED டவ Series) அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகவும் அதிக விலை நிர்ணயம் கொண்ட ஹை-எண்ட் டிவி மாடல்களுக்கு செல்லாமலேயே, சிறந்த படத் தரம், கேமிங்கிற்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் சிறந்த ஒலி அனுபவத்தை விரும்பும் பயனர்களை இலக்காக கொண்டு இந்த டிவி சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் 55-இன்ச். 65-இன்ச். 65-இன்ச் மற்றும் 85-இன்ச் என மொத்தம் 4 ஸ்க்ரீன் சைஸ்கள் உள்ளன.

தட்டி தூக்குற விலையில் 55, 65, 75, 85-இன்ச் Hisense டிவிகள் அறிமுகம்!

ஹைசென்ஸ் இ8எஸ் யுஎல்இடி மினி-எல்இடி டிவி சீரீஸ் விலை விவரங்கள்: 55-இன்ச் மாடலின் விலை ரூ.57,990 என்றும், 65-இன்ச் மாடலின் விலை ரூ.76,990 என்றும், 75-இன்ச் மாடலின் விலை ரூ.99,990 என்றும் மற்றும் 85-இன்ச் மாடலின் விலை ரூ.1,59,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாடல்களும் அமேசான், பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

ஹைசென்ஸ் இ8எஸ் யுஎல்இடி மினி-எல்இடி டிவி சீரீஸ் முக்கிய அம்சங்கள்: ஹைசென்ஸ் மினி-எல்இடி டிஸ்பி ளே தொழில்நுட்பம் மற்றும் 'ஃபுல்-அரே லோக்கல் டிம்மிங்' (full-array local dimming) வசதியை கொண்டுள்ளது. இது இருண்ட காட்சிகளில் ஆழமான கருப்பு நிறம், வலுவான கான்ட்ராஸ்ட் (contrast) மற்றும் சிறந்த நுணுக்கமான விவரங்களை வெளிப்படுத்த உதவுகிறது.

மேலும் ஹைசென்ஸ் இ8எஸ் யுஎல்இடி மினி-எல்இடி டிவி சீரீஸில் ஹை-க்யூஎல்இடி கலர் (Hi-QLED Colour) மற்றும் மேம்படுத்தப்பட்ட ப்ரைட்னஸ் (brightness) தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஹைசென்ஸ் கூறுகிறது. இது திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கேம்களில் வண்ணங்களை மிகவும் செழுமையாகவும், இயல்பாகவும் காட்ட உதவும்.

இந்த டிவிகள் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate) ஆதரவுடன் வருகின்றன, இதனால் வேகமாக நகரும் காட்சிகள் மற்றும் கேமிங்கின் போது அசைவுகள் மிகவும் மென்மையாக தெரியும். நெக்ஸ்ட் ஜெனரேஷன் கேமிங் கன்சோல்களை (next-gen consoles) சிறப்பாக கையாளக்கூடிய பிரீமியம் டிவியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு முக்கிய ஈர்ப்பாக அமையும்.

மேலும் நிகழ்நேரத்தில் படத் தரத்தை சரிசெய்ய ஹைசென்ஸ் தனது ஹை-வியூ ஏஐ எஞ்சினையும் (Hi-View AI Engine) இதில் சேர்த்துள்ளது. 85-இன்ச் மாடலில் ஹை-வியூ ஏஐ எஞ்சின் ப்ரோ இடம்பெற்றுள்ளது, இது தெளிவு மற்றும் விவரங்களை இன்னும் சிறப்பாக மேம்படுத்த உதவும். ஒலித் தரமும் இந்த டிவி சீரீஸின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த சீரீஸில் டேவியலேட் (Devialet) நிறுவனத்தால் ட்யூன் செய்யப்பட்ட பில்ட்-இன் சப்-வூஃபர் (subwoofer) உள்ளது. இது தனி சவுண்ட்பார் (soundbar) இல்லாமலேயே ஆழமான பேஸ் (bass) மற்றும் முழுமையான ஒலி அனுபவத்தை வழங்குகிறது.

மேலும் இந்த டிவிகள் VIDAA Smart OS-இல் இயங்குகின்றன, இது மெனுக்களுக்கு இடையே எளிதாகவும் வேகமாகவும் செல்ல உதவுகிறது. மேலும், HDR10+ Adaptive, Dolby Vision IQ, Filmmaker Mode, Pantone Validated colour, AI RGB லைட் சென்சார் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் (hands-free voice control) போன்ற அம்சங்களையும் ஹைசென்ஸ் சேர்த்துள்ளது. இவை அனைத்தும் டிவியை பயன்படுத்துவதை எளிதாக்குவதோடு, பல்வேறு அறைகள் மற்றும் பார்க்கும் சூழல்களுக்கு ஏற்றவாறு செயல்படவும் உதவுகின்றன.

சாம்சங் VS ஹைசென்ஸ்: முன்னரே குறிப்பிட்டபடி இந்த டிவி மாடல்கள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் 2026 விஷன் ஏஐ டிவி லைன்அப் (2026 Vision AI TV Lineup) மாடல்களுக்கு போட்டியாக வந்துள்ளன. சாம்சங்கின் புது டிவி சீரிஸின் கீழ் மைக்ரோ ஆர்ஜிபி, ஓஎல்இடி, நியோ க்யூஎல்இடி, தி ஃபிரேம், மினி எல்இடி மற்றும் யுஎச்டி என பல வகையான ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாம்சங்கின் மைக்ரோ ஆர்ஜிபி மாடல்களின் (Samsung's Micro RGB range) விலை ரூ.1,24,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் ஓஎல்இடி மாடல்களின் (Samsung's OLED range) விலை ரூ.1,14,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் ஃபிரேம் டிவி மாடல்களின் (Samsung's Frame TV range ) விலை ரூ.56,990 முதல் தொடங்குகிறது.

சாம்சங்கின் நியோ க்யூஎல்இடி மாடல்களின் (Samsung's Neo QLED range) விலை ரூ.52,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் மினி எல்இடி மாடல்களின் (Samsung's Mini LED range) விலை ரூ.42,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் யுஎச்டி டிவி மாடல்களின் (Samsung's UHD TV range) விலை ரூ.36,990 முதல் தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
Hisense E8S ULED Mini LED TV series Launched in India See 55 inch 65 inch 75 inch 85 inch Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X