Home
Gadgets

மொத்த மார்கெட் காலி.. 100 இன்ச் டிஸ்பிளே.. டால்பி அட்மோஸ் ஆடியோ.. டால்பி விஷன் வீடியோ.. வருது கேமிங் மாடல்!

இந்தியாவில் இருக்கும் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படி கியூஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், ஏஎம்டி ஃப்ரீசின்ங் பிரீமியம், ஏஐ ஸ்மூத் மோஷன், கேம் பார் போன்ற பீச்சர்களுடன் ஹிசென்ஸ் ஈ7கியூ ப்ரோ சீரிஸ் (Hisense E7Q PRO Series) வெளியாக இருக்கிறது. இன்-பில்ட் சப்வூப்பர், 50W ஆடியோ அவுட் கொண்ட ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், டால்பி விஷன் போன்ற பீச்சர்களிலும் மிரளவிட்டிருக்கிறது. இந்த ஹிசென்ஸ் ஈ7கியூ ப்ரோ சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக பீச்சர்களுடன் இந்த ஹிசென்ஸ் ஈ7கியூ ப்ரோ சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கின்றன. ஆனால், வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், முழு பீச்சர்களுடன் அமேசான் (Amazon) தளத்தில் சேல் பேஜ் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பது தெரிகிறது.

மொத்த மார்கெட் காலி.. 100 இன்ச் டிஸ்பிளே.. டால்பி அட்மோஸ் ஆடியோ டிவி!

இந்த டிவியில் இருக்கும் பீச்சர்கள் கேமிங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி இருக்கிறது. ஏனென்றால், டிஸ்பிளே பீச்சர்கள் முதல் ஆடியோ பீச்சர்கள் வரையில் பிரீமியமாக இருக்கிறது. இருப்பினும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிப்பதால், எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. முழு பீச்சர்கள் எப்படி?

ஹிசென்ஸ் ஈ7கியூ ப்ரோ அம்சங்கள் (Hisense E7Q PRO Specifications): இந்த சீரிஸில் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 100 இன்ச் டிஸ்பிளே மாடல்கள் கிடைக்க இருக்கிறது. 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன் கொண்ட கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz எச்எஸ்ஆர் (HSR) சப்போர்ட் கிடைக்கிறது.

இதுபோக குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology), டால்பி விஷன் (Dolby Vision), டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) மற்றும் எம்ஈஎம்சி (MEMC) சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் பீச்சர்களை பார்க்கையில், ஏஐ ஸ்மூத் மோஷன் (AI Smooth Motion), கேம் மோட் ப்ரோ (Game Mode Pro) மற்றும் கேம் பார் (Game Bar) பீச்சர்கள் வருகின்றன.

இதுபோக ஏஐ 4கே அப்ஸ்கேலர் (I 4K Upscaler), ஏஐ எச்டிஆர் அப்ஸ்கேலர் (AI HDR Upscaler), ஏஐ லைட் சென்சார் (AI Light Sensor) மற்றும் ஏஐ பிக்சர் (AI Picture) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல ப்ரீசின்ங் ப்ரீமியம் (FreeSync Premium) சப்போர்ட் கிடைக்கிறது. ஓடிடி பிரியர்களுக்கு ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) கிடைக்கிறது. ஆடியோவிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது.

மொத்த மார்கெட் காலி.. 100 இன்ச் டிஸ்பிளே.. டால்பி அட்மோஸ் ஆடியோ டிவி!

ஆகவே, டால்பி அட்மோஸ் (Dolby Atoms) மட்டுமல்லாமல், 2.1 சேனல் கொண்ட 50W ஆடியோ அவுட் கொடுக்கிறது. 20W ஆடியோ அவுட் கொண்ட சப்வூப்பர் கிடைக்கிறது. மேலும், டால்பி எம்எஸ்12 (Dolby MS12) மற்றும் டிடிஎஸ் எக்ஸ் (DTS X) கிடைக்கிறது. இதுபோக ஹை-கான்சர்டோ 2.0 (Hi-Concerto 2.0), ஈஇசட்பிளே 2.0 (EzPlay 2.0) மற்றும் டபுள்யூஐஎஸ்ஏ சவுண்ட்செண்ட் (WiSA SoundSend) வருகிறது.

Take a Poll

இந்த ஹிசென்ஸ் ஈ7கியூ ப்ரோ மாடல்களில் விஐடிஏஏ ஓஎஸ் (VIDAA OS) கிடைக்க இருக்கிறது. இருப்பினும், பில்ட்-இன் அலெக்சா, ஸ்கிரீன் ஷேரிங், ஏர்பிளே2 போன்ற பீச்சர்கள் முதல் நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ போன்ற ஆப்களும் கிடைக்கின்றன. டூயல்-பேண்ட் வை-பை, ப்ளூடூத் 5.0 முதல் எச்டிஎம்ஐ, யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Hisense E7Q PRO Series QLED TV To Launch Soon in India For Gamers Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X