100 இன்ச் 4K டிவியை களமிறக்கிய Hisense.. டால்பி அட்மாஸ்.. 24W ஸ்பீக்கர்கள்.. MEMC.. எந்த மாடல்?
ஹைசென்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹைசென்ஸ் ஈ7கியூ ப்ரோ சீரிஸ் (Hisense E7Q PRO Series) ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சீரிஸ் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 100 இன்ச் அளவுகளில் வாங்க கிடைக்கும். இப்போது ஹைசென்ஸ் ஈ7கியூ ப்ரோ டிவிகளின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹைசென்ஸ் ஈ7கியூ ப்ரோ சீரிஸ் அம்சங்கள்: தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 100 இன்ச் டிவிகள் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், கியூஎல்இடி கலர் (QLED Colour), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), எச்டிஆர் 10, எச்டிஆர் 10 அடாப்டிவ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளன.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவு இந்த புதிய ஹைசென்ஸ் டிவிகளில் உள்ளன. அதேபோல் இந்த டிவிகளில் குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology) ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த டிவகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹைசென்ஸ் நிறுவனம்.
3800:1 நேட்டிவ் கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ (3800:1 Native Contrast Ratio), கேம் பார் (Game Bar), நேட்டிவ் 144ஹெர்ட்ஸ் விஆர்ஆர் (Native 144Hz VRR) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் ஹைசென்ஸ் ஈ7கியூ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. அதேபோல் VIDAA ஓஎஸ் மூலம் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் இயங்குகின்றன.
24W ஸ்பீக்கர்கள் உடன் இந்த புதிய ஹைசென்ஸ் டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும் டால்பி விஷன் அட்மாஸ் (Dolby Vision Atmos), டால்பி அட்மாஸ் ஆடியோ (Dolby Atmos Audio) உள்ளிட்ட பல தரமான அம்சங்கள் இந்த புதிய டிவிகளின் உள்ளன. எனவே ஹைசென்ஸ் ஈ7கியூ ப்ரோ சீரிஸ் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
ஏஐ 4கே அப்ஸ்கேலர் (I 4K Upscaler), ஏஐ பிக்சர் (AI Picture), ஏஐ லைட் சென்சார் (AI Light Sensor) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களுடன் இந்த புதிய ஹைசென்ஸ் டிவிகள் வெளிவந்துள்ளன. அதேபோல் வாய்ஸ் கண்ட்ரோல், பில்ட்-இன் அலெக்சா, ஆப்பிள் ஏர் பிளே, ஆப்பிள் ஹோம்கிட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் புதிய ஹைசென்ஸ் ஈ7கியூ ப்ரோ சீரிஸ் மாடல்களில் உள்ளன.

இந்த புதிய டிவிகளுடன் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ரிமோட் வருகிறது. அதேபோல் டூயல் பேண்ட் வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஏவி இன்புட், ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், டிஜிட்டல் ஆடியோ அவுட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹைசென்ஸ் ஈ7கியூ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளன.
அதேபோல் இந்த ஹைசென்ஸ் ஈ7கியூ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் விரைவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிவிகளின் ஆரம்ப விலை ரூ.42,999 என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








