Home
Gadgets

விஸ்வரூப விற்பனை.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. பெசல்-லெஸ் டிசைன்.. ஆஃபரில் Hisense டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் grand home appliances sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனை வரும் டிசம்பர் 21-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் அதிகம் எதிர்பார்த்த 43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2022 (Hisense A4G Series Full HD LED Smart Android TV 2022) மாடலுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை தற்போது ரூ.20,999 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூப விற்பனை.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் Hisense டிவி.. எந்த மாடல்?

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இப்போது 43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: ஃபுல் எச்டி எல்இடி ஸ்க்ரீன் மற்றும் 1920 x 1080 பிக்சலஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஸ்மார்ட் டிவி. இதுதவிர 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன் உடன் வெளிவந்துள்ளது. எனவே இது ஒரு தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும். பின்புCA55×4 பிராசஸர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த டிவியில் G31 MP2 கிராஃபிக் பிராசஸர் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவியில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு டிவி 11 (ஆர்) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அல்ட்ரா விவிட் ஹை கான்ட்ராஸ்ட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. மேலும் உங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்களைப் பார்க்கும் போது தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த டிவியியுடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் உடன் வெளிவந்துள்ளது இந்த டிவி. இதுதவிர சில ஆப்ஸ்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட்.

அதேபோல் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், இன்-பிட் குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹைசென்ஸ் நிறுவனம்.

விஸ்வரூப விற்பனை.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் Hisense டிவி.. எந்த மாடல்?

டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த 43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் டூயல் பேண்ட் வைஃபை, ஈதர்நெட் லேன், எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி போர்ட், டிஜிட்டல் ஆடியோ அவுட், ப்ளூடூத் 5.0, ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டிவி.

பட்ஜெட் விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த 43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் ஹைசென்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Hisense A4G Series Smart TV is available at 39 percent discount on Flipkart: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X