இதுதான் ஆஃபர்.. ரூ.15,999 பட்ஜெட்ல Android ஸ்மார்ட் டிவி.. 8ஜிபி மெமரி.. பெசல் லெஸ் டிசைன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 43 இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Hisense A4G Series Full HD LED Smart Android TV) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு OS, பெசல்லெஸ் டிசைன், தரமான ஆடியோ வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஹைசென்ஸ் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.15,999 பட்ஜெட்டில் வாங்கிவிட முடியும்.

43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Hisense A4G Full HD LED Smart Android TV Specifications): பெசல்-லெஸ் டிசைன் உடன் வெளிவந்துள்ளது இந்த ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவி. எனவே இது ஒரு தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும். பின்பு CA55×4 பிராசஸர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த டிவியில் G31 MP2 கிராஃபிக் பிராசஸர் ஆதரவும் உள்ளது.
டிஸ்பிளே அம்சங்கள் குறித்து பார்க்கையில், ஃபுல் எச்டி எல்இடி ஸ்க்ரீன் மற்றும் 1920 x 1080 பிக்சலஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஸ்மார்ட் டிவி. இதுதவிர 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த 43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு டிவி 11 (Android TV 11) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக அல்ட்ரா விவிட் ஹை கான்ட்ராஸ்ட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. மேலும் உங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்களைப் பார்க்கும் போது தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த டிவியியுடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரிமோட்.

நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், இன்-பிட் குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹைசென்ஸ் நிறுவனம்.
மேலும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் இந்த 43-இன்ச் ஹைசென்ஸ் ஏ4ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். டூயல் பேண்ட் வைஃபை, ஈதர்நெட் லேன், எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி போர்ட், டிஜிட்டல் ஆடியோ அவுட், ப்ளூடூத் 5.0, ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டிவி.


Click it and Unblock the Notifications








