கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஒஎஸ்.. ஆஃபரில் Hisense டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் 43 இன்ச் ஹைசென்ஸ் (Hisense) ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (43E43N) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 30W ஸ்பீக்கர்கள், கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS), பெசல் லெஸ் டிசைன், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹைசென்ஸ் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ஹைசென்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (Hisense 43 inch Full HD LED Smart Google TV) 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.17499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஹைசென்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Hisense 43 inch Full HD LED Smart Google TV Specifications): ஃபுல் எச்டி எல்இடி ஸ்க்ரீன் உடன் ஹைசென்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான டிஸ்பிளே அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
பெசல்-லெஸ் டிசைன் உடன் வெளிவந்துள்ளது இந்த ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. பின்பு எச்டிஆர் 10 (HDR 10) ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் வழங்கும். மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த ஹைசென்ஸ் டிவி இயங்குகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
குறிப்பாக டால்பி அட்மாஸ் (Dolby Audio) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் டிவி ஸ்மார்ட் கூகுள் டிவி. ஸ்டான்டர்ட், மியூசிக், சினிமா, பர்சனல் உள்ளிட்ட பல்வேறு சவுண்ட் மோட்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
3 யுஎஸ்பி போர்ட் (USB Port), மினி ஏவி (Mini AV) மற்றும் எல்ஏஎன் போர்ட் (LAN Port) வருகிறது. ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி கொண்டுள்ளது இந்த டிவி.
இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் உடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications