வெளுத்துக் கட்டும் அமேசான்.. கூகுள் டிவி OS.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் Hisense 4கே டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஹைசென்ஸ் (Hisense) 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட் டால்பி ஆடியோ, கேம் மோட் பிளஸ், கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹைசென்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் ஹைசென்ஸ் 43 இன்ச் இ6என் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Hisense 43 inch E6N Series 4K Ultra HD Smart LED Google TV) மாடலுக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.20499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஹைசென்ஸ் 43 இன்ச் இ6என் சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (Hisense 43 inch E6N Series 4K Smart Google TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் இ6என் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த டிவியில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
அதேபோல் 4K ஏஐ அப்ஸ்கேலிங் (4K AI Upscaling) மற்றும் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுடன் ஹைசென்ஸ் 43 இன்ச் இ6என் சீரிஸ் 4கே டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹைசென்ஸ் நிறுவனம்.
விஆர்ஆர் (VRR) சப்போர்ட் கொண்ட கேம் மோட் பிளஸ் (game mode plus) ஆதரவு இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். அதேபோல் டைனாமிக் பேக்லிட் கன்ட்ரோல் (Dynamic Backlight Control), வைடு கலர் காமட் (Wide Color Gamut),
178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ஹைசென்ஸ் டிவி வெளிவந்தது.
குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த ஹைசென்ஸ் டிவி இயங்குகிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்றவற்றை இதில் பயன்படுத்த முடியும். பின்பு நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் போன்ற இன்-பில்ட் ஆப்கள் கொண்டுள்ளJ இந்த டிவி.

ஆப்பிள் ஏர் பிளே (Apple Airplay) ஆதரவும் இந்த டிவியில் உள்ளன. மேலும் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்களர் இந்த டிவியில் உள்ளதால் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். பின்பு இந்த டிவி உடன் ஒரு ஸ்மார்ட் ரிமோட் வருகிறது. அதுவும் இந்த ஸ்மார்ட் ரிமோட் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.
வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் இ6என் சீரிஸ் 4கே டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








