120-இன்ச் 4கே Hisense TV இந்தியாவில் அறிமுகம்: விலையை சொன்னா நம்புவீங்களா?

|

இந்தியாவில் தற்போது பெரிய ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

120-இன்ச் 4கே லேசர் டிவி

120-இன்ச் 4கே லேசர் டிவி

தற்போது Hisense நிறுவனமும் சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட 120-இன்ச் 4கே லேசர் டிவியை இந்தியாவில் அறிமுகம்
செய்துள்ளது. குறிப்பாக முதல் முறையாக ஸ்மார்ட் லேசர் டெக்னாலஜியுடன் இந்த 120-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதாகHisense நிறுவனம் கூறியுள்ளது.

கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!

டிவியின் வடிவமைப்பு?

டிவியின் வடிவமைப்பு?

அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு நேர்த்தியாகவும், மிகவும் அருமையாகவும் உள்ளது. முதலில் 120-இன்ச் 4கே லேசர் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த புதிய ஸ்மார்ட் டிவி 3000 lumens பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே படங்களை தெளிவாகப் பார்க்க முடியும்.

என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

குறிப்பாக இந்த டிவி மாடல் 4கே யுஎச்டி பிக்ஸர் குவாலிட்டி கொண்ட மிகப் பெரிய ALR ஸ்கிரீனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இது சிறந்த தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!

 ஸ்மார்ட் டிவியின் ஸ்பீக்கர்கள் எப்படி?

ஸ்மார்ட் டிவியின் ஸ்பீக்கர்கள் எப்படி?

மேலும் Hisense 120-இன்ச் 4கே ஸ்மார்ட் லேசர் டிவியில் அதிர்வை தரும் 40W டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் உள்ளது. அதாவது இந்த டிவியில் டால்பி அட்மோஸ்-எனேபிள்டு 40W ஃப்ரன்ட்-பையரிங் ஸ்பீக்கர்கள் உள்ளதால் சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.

நீங்கள் நினைத்த வசதி

நீங்கள் நினைத்த வசதி

தற்போது வெளிவந்துள்ள இந்த 120-இன்ச் ஹைசென்ஸ் லேசர் டிவியில் அலெக்ஸா-பில்ட்-இன் ஆதரவும் உள்ளது. எனவே பயனர்கள் ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களை ஹேண்ட்ஸ் ஃப்ரீ மூலம் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக வாய்ஸ் ரிமோட் மூலம் உங்களுக்கு தேவையான கன்டென்டை எளிமையாக தேடலாம்.

Airtel பயனர்களே என்ஜாய்: Amazon பிரைம், டிஸ்னி+ Hotstar இனி இலவசம்- இதை செய்தால் போதும்!Airtel பயனர்களே என்ஜாய்: Amazon பிரைம், டிஸ்னி+ Hotstar இனி இலவசம்- இதை செய்தால் போதும்!

பாதுகாப்பு அம்சம்

பாதுகாப்பு அம்சம்

TUV-சான்றளிக்கப்பட்ட ப்ளூ லைட் டெக்னலாஜி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 120-இன்ச் ஸ்மார்ட் டிவி. எனவே இது கண்களுக்கு சிறந்த பாதுகாப்பை கொடுக்கும். இதுதவிர ஸ்மூத் மோஷன் ஃபார் ஸ்போர்ட்ஸ், ஃபிலிம்மேக்கர் மோட் போன்ற அசத்தலான அம்சங்களையும் வழங்குகிறது Hisense 120-இன்ச் 4கே ஸ்மார்ட் லேசர் டிவி.

இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?

வியக்கவைக்கும் விலை

வியக்கவைக்கும் விலை

Hisense 120-இன்ச் 4கே ஸ்மார்ட் லேசர் டிவியின் விலை ரூ.4,99,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

அதேபோல் Hisense 120-இன்ச் டிவிக்கு 3 வருட வாரண்டி உள்ளது. இதுதவிர குறிப்பிட்ட காலத்திற்கு Amazon 4K Fire TV Stick Max உடன் இந்த டிவி விற்கப்படுகிறது.

Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்

நம்பி வாங்கலாமா?

நம்பி வாங்கலாமா?

இப்போது வரும் 55-இன்ச, 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட அதிநவீன தொழில்நுட்ப ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த Hisense 120-இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக பெரிய ஸ்கிரீன் என்பதால் ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும். OTT-இல் வெளியாகும் படங்களை இதன் உதவியுடன் மிகத் துல்லியமாக பார்க்க முடியும்.

எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை மட்டும் தான் சற்று உயர்வாக உள்ளது. விலை இன்னும் கொஞ்சம் குறைவாக இருந்தால் அருமையாக இருந்திருக்கும். மற்றபடி இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Hisense 120-inch 4K Smart Laser TV Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X