Home
Gadgets

Hisense அறிமுகம் செய்த 116 இன்ச் டிவி.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி OS.. விலையை சொன்னா நம்புவீங்களா?

டிசிஎல் நிறுவனம் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 115 இன்ச் ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் டிசிஎல் நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஹைசென்ஸ் (Hisense) நிறுவனம் புதிய 116 இன்ச் டிவியை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. அதாவது 116-இன்ச் யுஎக்ஸ் ஆர்ஜிபி-மினி எல்இடி டிவி (116UX) மாடலை தான் வெளியிட்டுள்ளது ஹைசென்ஸ்.

குறிப்பாக இந்த புதிய 116 ஹைசென்ஸ் டிவி (Hisense 116 inch UX RGB MiniLED TV) மாடல் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட் டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஹைசென்ஸ் டிவியின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Hisense அறிமுகம் செய்த 116 இன்ச் டிவி.. என்ன விலை?

ஹைசென்ஸ் 116-இன்ச் யுஎக்ஸ் ஆர்ஜிபி-மினி எல்இடி டிவி அம்சங்கள் (Hisense 116 inch UX RGB MiniLED TV Specifications): இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே ஆனது டால்பி விஷன் (Dolby Vision), டால்பி விஷன் IQ (Dolby Vision IQ), ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு(IMAX Enhanced)போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் எச்டிஆர் (HDR) ஆதரவும் இந்த 116 இன்ச் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர லோ-ரிஃப்லெக்ஷன் ஸ்க்ரீன்(low-reflection screen), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle),ஆன்டி-கிளார் (anti-glare), 10,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களுடன் ஹைசென்ஸ் 116-இன்ச் யுஎக்ஸ் ஆர்ஜிபி-மினி எல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே 116-இன்ச் யுஎக்ஸ் ஆர்ஜிபி-மினி எல்இடி டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

Google TV ஒஎஸ் மூலம் இந்த புதிய 116 ஹைசென்ஸ் டிவி மாடல் இயங்குகிறது. 800க்கும் மேற்பட்ட நேரடி சேனல்கள்( 800 live channels) மற்றும் பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு கூகுள் பயன்பாடுகளை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைசென்ஸ் நிறுவனத்தின் Hi-View AI Engine X சிப்செட் மூலம் இந்த 116-இன்ச் டிவி இயங்குகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது AI மற்றும் RGB லோக்கல் டிம்மிங்கைப் பயன்படுத்தி நிறம் மற்றும் பிரைட்னஸ் சரிசெய்யும். இதுதவிர மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சிப்செட்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ்-விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) ஆதரவு கொண்ட 6.2.2-சேனல் சினிஸ்டேஜ் X ஆடியோ சிஸ்டத்துடன் (CineStage X audio system) 116-இன்ச் யுஎக்ஸ் ஆர்ஜிபி-மினி எல்இடி டிவி (116UX) மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிவியில் பொதுவான நிகழ்ச்சிகள் முதல் அதிரடி காட்சிகள் வரை ஆடியோ வெளியீட்டை சரிசெய்யும் AI சவுண்ட் ஆப்டிமைசேஷன்(AI Sound Optimization) ஆதரவும் உள்ளது.

எச்டிஎம்ஐ eARC (HDMI eARC), வைஃபை 6இ, அலெக்சா, கூகுள் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த ஹைசென்ஸ் 116-இன்ச் யுஎக்ஸ் ஆர்ஜிபி-மினி எல்இடி டிவி மாடல் உள்ளன. மேலும் இந்த டிவியின் விலை CNY 99,999 (இந்திய மதிப்பில் ரூ.11,82,047) ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹைசென்ஸ் டிவி வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Hisense 116-inch UX RGB-MiniLED TV launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X