Home
Gadgets

வந்துட்டான்யா, வந்துட்டான்.. டால்பி அட்மாஸ்.. 110 இன்ச் 4K டிவியை அறிமுகம் செய்த Hisense.. என்ன விலை?

ஹைசென்ஸ் (Hisense) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் பிரமாண்டமான டிவிகளை கொண்டுவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 110 இன்ச் மினிஎல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது ஹைசென்ஸ் நிறுவனம்.

அதாவது ஹைசென்ஸ் 110யுஎக்ஸ் மினிஎல்இடி டிவி (Hisense 110UX Mini LED TV) என்று அழைக்கப்படும் இந்த டிவி ஆனது மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது. இப்போது புதிய 110-இன்ச் டிவியிவின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

110 இன்ச் 4K டிவியை அறிமுகம் செய்த Hisense.. என்ன விலை?

ஹைசென்ஸ் 110யுஎக்ஸ் மினிஎல்இடி டிவி அம்சங்கள் ( Hisense 110UX Mini LED TV Specifications): 4கே டிஸ்பிளே உடன் இந்த அட்டகாசமான ஹைசென்ஸ் 110யுஎக்ஸ் மினிஎல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 40,000 லோக்கல் டிம்மிங் ஜோன்ஸ் (dimming zones), 10,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இதுதவிர டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ), எச்எல்ஜி (HLG), எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு தரமான டிஸ்பிளே அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி ஒரு மினி தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 110யுஎக்ஸ் மினிஎல்இடி டிவி வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹைசென்ஸ் நிறுவனம்.

கேமிங் வசதிக்கு தகுந்த 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு இந்த டிவியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேம் மோட் ப்ரோ (Game Mode Pro), AMD ஃப்ரீசிங்க் பிரீமியம் ப்ரோ (AMD FreeSync Premium Pro) சப்போர்ட் உள்ளிட்ட பல கேமிங் அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

பிலட்-இன்ச் 4.2.2 சேனல் சவுண்ட் சிஸ்டம் ஆதரவைக் கொண்டுள்ளது அட்டகாசமான 110-இன்ச் கொண்ட ஹைசென்ஸ் 110யுஎக்ஸ் மினிஎல்இடி டிவி மாடல். அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஹைசென்ஸ் டிவி. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

Vidda OS மூலம் இந்த ஹைசென்ஸ் 110யுஎக்ஸ் மினிஎல்இடி டிவி இயங்குகிறது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என ஹைசென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

110 இன்ச் 4K டிவியை அறிமுகம் செய்த Hisense.. என்ன விலை?

எச்டிஎம்ஐ போர்ட், Hi-View AI இன்ஜின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. ஆனால் ஹைசென்ஸ் 110யுஎக்ஸ் மினிஎல்இடி டிவி ஆனது தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த 110-இன்ச் கொண்ட ஹைசென்ஸ் 110யுஎக்ஸ் மினிஎல்இடி டிவி மாடலில் விலை ~$21,780 (இந்திய மதிப்பில் ரூ.18,49,677)-ஆக உள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும்.

photo credit: hisense, gizmochina, prnewswire

More from GizBot

Best Mobiles in India

English summary
Hisense 110UX Mini LED TV Launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X