மாஸ் காட்டிய Hisense.. 4ஜிபி ரேம்.. 100 இன்ச் மான்ஸ்டர் டிவி அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?
ஹைசென்ஸ் நிறுவனம் தனது 100-இன்ச் மான்ஸ்டர் டிவி மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஹைசென்ஸ் Vidda நியூ எஸ்100 ப்ரோ (Hisense Vidda NEW S100 Pro) மாடல் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த புதிய டிவி தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது ஹைசென்ஸ் Vidda நியூ எஸ்100 ப்ரோ மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹைசென்ஸ் Vidda நியூ எஸ்100 ப்ரோ அம்சங்கள்: 3840 x 2160 ரெசல்யூஷன் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 85% டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut), 10-பிட் கலர் (10-Bit color) மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவியின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் ஹைசென்ஸ் Vidda நியூ எஸ்100 ப்ரோ மாடல் ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 144Hz refresh rate) ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 5-யூனிட் 2.1-சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம் (5-unit 2.1-channel speaker system) கொண்டுள்ளது இந்த அசத்தலான 100-இன்ச் மான்ஸ்டர் டிவி. எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஹைசென்ஸ் Vidda நியூ எஸ்100 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் நீங்கள் நினைத்து ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து தடையின்றி பயன்படுத்தலாம்.புளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் வைஃபை 6 (Wi-Fi ) கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய டிவி.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், RJ45 நெட்வொர்க் போர்ட், ஆண்டெனா இன்புட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த டிவியில் உள்ளன. மேலும் டால்பி ஆடியோ, டிடிஸ் சவுண்ட் போன்ற ஆடியோ அம்சங்களும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹைசென்ஸ் நிறுவனம்.
ஆனால் இந்த ஹைசென்ஸ் Vidda நியூ எஸ்100 ப்ரோ மாடல் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஹைசென்ஸ் அறிமுகம் செய்த 100-இன்ச் டிவியின் விலை 8,999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.1,05,735)-ஆக உள்ளது.

மேலும் இந்தியாவில் ஹைசென்ஸ் 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் QLED டிவி (43E7K) மாடலுக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.. குறிப்பாக இந்த டிவியை அமேசான் தளத்தில் வாங்க முடியும். இந்த 43-இன்ச் 4க டிவி ஆனது 3840x2160 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
மேலும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் டிவி. மேலும் குவாட்-கோர்ட் பிராசஸர், டால்பி விஷன், கேம் மோட் பிளஸ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் போன்ற பல சிறப்பான அம்சங்களும் இந்த 43-இன்ச் டிவியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








