ஏன் இன்னும் குவர்டி கீபோர்டை பயன்படுத்துகிறோம்?

1860களில், கிரிஸ்டோபர் லேதம் சோல்ஸ் என்பவர் அலுவலகங்களை அதிக திறனுடையதாக மாற்றும் வழிகளை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார்.

|

இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் கடந்த சில நிமிடங்களாக ஏதேனும் ஒரு வகையில் கீபோர்டை பயன்படுத்தியுள்ளீர்கள்என்று பொருள். இந்த தட்டச்சு செய்யும் இடைமுகங்கள் நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் நமக்கு நம் மீதே அதிக கட்டுப்பாடுகள் தருகின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு ஏன் அவை அவ்வாறு செயல்படுகின்றன வியந்ததுண்டா? எப்படி நவீன விசைப்பலகையானது மோர்ஸ் கோட், மார்கெட்டிங் மற்றும் சிறிதளவு லக் உடன் வெளிவந்தது என்ற கதை இது.

ஏன் இன்னும் குவர்டி கீபோர்டை பயன்படுத்துகிறோம்?

குவர்டி பற்றி தெரியுமா?
நவீன கணிணிகள் மற்றும் கீபோர்டுகள் குவர்டி(QWERTY) லேஅவுட் பயன்படுத்தும் நிலையில், மேல் வலது மூலையில் உள்ள ஆங்கில எழுத்துக்கள் காரணமாக இந்த பெயரிடப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு அவ்வளவாக மிகத் திறனுடையது அல்ல மற்றும் நீங்கள் எப்போது எப்படி தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டீர்கள் என பின்னோக்கி பார்த்தால், ஒரு வேளை இந்த கீபோர்டு அவ்வளவாக உள்ளுணர்வுடன் இயைந்து செயல்படவில்லை என அடையாளம் காண்பீர்கள்.


1860களில், கிரிஸ்டோபர் லேதம் சோல்ஸ் என்பவர் அலுவலகங்களை அதிக திறனுடையதாக மாற்றும் வழிகளை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார். குறிப்பாக அவர், மக்கள் எப்படி எழுதுகின்றனர் மற்றும் தொடர்புகொள்கின்றனர் என்பதை மேம்படுத்த பலவித டைப்ரைட்டர்கள் மற்றும் கீ லேஅவுட்களை உருவாக்குவதில் தனது நேரத்தை செலவளித்தார். இத்துறையில் மற்றவர்களுடன் பணியாற்றி, 1867ல் முதல் டைப் ரைட்டருக்கு காப்புரிமை பெற்றார். இந்த கண்டுபிடிப்புக்கு முன்னதாக, வேறு பல இயந்திரங்கள் எழுத பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவை எவையும் இந்த தரத்தில் இல்லை.

ஏன் இன்னும் குவர்டி கீபோர்டை பயன்படுத்துகிறோம்?

பியோனோவின் இடைமுகத்துடன் ஒத்திருத்த சோல்ஸின் வடிவமைப்பில், ஆங்கில எழுத்துக்கள் அகர வரிசைப்படி இருந்தன. இது போன்ற வடிவமைப்பு உள்ளுணர்வுடன் இயைந்து இருப்பது போல இருந்தாலும், பயனர்கள் தங்களுக்கு தேவையான விசைகளை தேடும் பொழுது சிரமப்பட்டனர்.

புதுப்புது வடிவமைப்புகளில் தொடர்ந்து பணியாற்றி வந்ந நிலையில், 1873ல் சோல்ஸ் அவர்கள் தற்போதுள்ள நவீன குவர்டி லே அவுட்டை போல உள்ள ஒன்றை வடிவமைத்தார். ஆனால் சில விசைகள்(Keys) மாறியிருந்தன. அது QWE.TY என அறியப்பட்டு, கீழே படத்தில் உள்ள லே அவுட்டை போல இருந்தது.

ஏன் இன்னும் குவர்டி கீபோர்டை பயன்படுத்துகிறோம்?

முந்தைய டைப் ரைட்டர்களில் உள்ள விசை நெருக்கடிகளை(Key Jamming) குறைக்க வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் சோல்ஸ் இந்த வடிவமைப்பை உருவாக்கியுள்ளார் என பிரபல கதைகள் கூறுகின்றன. டைப்ரைட்டர் பட்டைகளில் இயந்திர நெருக்கடி ஏற்படாத வகையில் பொதுவாக அதிகம் பயன்படுத்தும் எழுத்துக்களின் வரிசையை வரிசைகள் அடுக்கப்பட்டுள்ளது என்ற எண்ணம் நிலவியது.

எனினும் கீபோர்டு பற்றிய இந்த பிரபல புராணங்கள் அனைத்தும் கட்டுக்கதை என கியோடோ பல்கலைகழக ஆராயச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுப்படி இந்த குவர்டி வடிவமைப்பே டெலிகிராப் ஆப்ரேட்டர்களின் பரிசோதனையின் போது உருவானது. அந்த ஆப்ரேட்டர்கள் "S","Z" மற்றும்"E" எழுத்துகள் அருகருகில் இருக்க பரிந்துரைத்தனர். ஏனெனில் இவற்றின் மோர்ஸ் கோட்-கள் ஒரே மாதிரியான அதேநேரம் அடிக்கடி குழப்புபவையாகவும் இருந்தன. எனவே இதன் மூலம் அவர்கள்தேவையான எழுத்தை விரல்களை வைப்பதன் மூலம் டைப் செய்ய முடிந்தது. இதே முறையில் தான் இன்னபிற எழுத்துக்களும் விசைப்பலகை முழுவதும் வைக்கப்பட்டன என்கின்றனர். தற்போது இந்த விளக்கம் எப்படி குவர்டி வடிவமைப்பு உருவானது என்ற உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்தாலும், வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவடையவில்லை.

ஏன் இன்னும் குவர்டி கீபோர்டை பயன்படுத்துகிறோம்?

எது எப்படியோ, உண்மையான QWE.TY லே அவுட்டில் சில எழுத்துக்களை அங்கும் இங்கும் மாற்றி, கடைசியாக QWERTY வடிவமைப்பை பெற்று, 1878ல் காப்புரிமை பெற்றார். சோல்ஸ் மற்றும் அவரின் பங்குதாரரான கார்லோஸ் கிளெட்டனும் குவர்டி வடிவமைப்புக்கு காப்புரிமை பெற்ற உடன், துப்பாக்கி தயாரிப்பாளரான ரேமிங்டன் உடன் உற்பத்தி ஒப்பந்தம் செய்து விசைப்பலகைகளை தயாரிக்க ஆரம்பித்தனர். இந்த ஒப்பந்தம் அதீத வெற்றியை பெற்று, 1890ல் அமெரிக்காவில் 100,000 குவர்டி விசைப்பலகைகள் பயன்பாட்டில் இருந்தன.
Best Mobiles in India

English summary
Here's Why We Still Use the QWERTY Keyboard: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X