சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம்: இதோ எளிய வழிமுறை!

|

தொலைக்காட்சி பயன்பாடு என்பது நீண்டகாலமாக வீட்டில் அங்கம் வகிக்கும் பொருள்., தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற் தொலைக்காட்சி தோற்றங்களும் காட்சிகளும் மாறிக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன்கள் எப்படி அனைவரையும் ஆக்கிரமித்து வருகிறதோ அதேபோல் அனைவரின் வீட்டிலும் ஸ்மார்ட் டிவி பயன்பாடு பிரதான ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக கொரோனா பரவிய காலம் முதல் ஏணைய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. இதை பெரிய திரையில் பார்ப்பதற்கு ஓடிடி அணுகலோடு கூடிய ஸ்மார்ட்டிவி தேவை கட்டாயமாகி இருக்கிறது.

ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்

ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்

ஸ்மார்ட் டிவி தேவை அதிகரித்து வந்தாலும் வீட்டில் இருக்கும் பழைய தொலைக்காட்சி எந்த பிரச்சனையும் இல்லாமல் செயல்படுவதால் ஸ்மார்ட் டிவி வாங்க தயக்கம் ஏற்படும். ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை பழைய டிவியை மாற்றாமல் அந்த டிவியில் கிடைக்கச் செய்ய ஒரு வழி இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸைப் பயன்படுத்துவதுதான். சில சிறந்த ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ்

நாட்டின் முன்னணி டிடிஎச் நிறுவனங்களில் ஏர்டெல் ஒன்றாகும். கடந்தாண்டு, நிறுவனம் ஆண்ட்ராய்டு 9.0 இயக்கும்படியான எக்ஸ்ட்ரீம் பாக்ஸை வெளியிட்டது. இந்த பாக்ஸ் கூகிள் அசிஸ்டென்ட் ஆதரவுடன் வருகிறது. இந்த எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் சேட்டிலைட் சேனல்கள் மற்றும் அனைத்து பிரதான ஓடிடி பயன்பாடுகளின் உள்ளடக்க அணுகலையும் வழங்குகிறது.

ACT ஸ்ட்ரீம் டிவி 4கே ஸ்ட்ரீம்பாக்ஸ்

ACT ஸ்ட்ரீம் டிவி 4கே ஸ்ட்ரீம்பாக்ஸ்

முன்னணி பிராட்பேண்ட்களில் ஒன்றான ACT ஸ்ட்ரீம் டிவி 4கே பாக்ஸ் சேவையை வழங்குகிறது. இது 4 கே ஸ்ட்ரீமிங் தரம், டால்பி ஆடியோ மற்றும் கூகிள் அசிஸ்டென்ட் குரல் கட்டுப்பாடு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது. இதில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. இந்த பாக்ஸ் விலை ரூ.4,499. HiSilicon 3798M V200 சிப்செட் கொண்ட இந்த பாக்ஸ் Android 9.0 Pi மூலம் இயக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் போன் மெமரியில் தானாக நிரம்புவதை நிறுத்துவது எப்படி?

டிஷ் எஸ்.எம்.ஆர்.டி ஹப்

டிஷ் எஸ்.எம்.ஆர்.டி ஹப்

ஆண்ட்ராய்டு எச்டி செட்-டாப் பாக்ஸ் டிஷ் டிவி, கடந்தாண்டு அக்டோபரில் ரூ.3,999-க்கு அறிமுகப்படுத்தியது. இந்த டெட்டாப் பாக்ஸ், கூகிள் அசிஸ்ட்டென்ட் மற்றும் கூகிள் ப்ளே ஸ்டோர் ஆதரவும் உள்ளது. அமேசான் ப்ரைம் மற்றும் ஜீ5 உள்ளிட்ட பல ஓடிடி பயன்பாடுகளின் அணுகல் கிடைக்கிறது. இந்த செட்-டாப் பாக்ஸில் உள்ளமைக்கப்பட்ட க்ரோம் காஸ்ட் அம்சமும் இருக்கிறது.

டாடா ஸ்கை பிங்+ செட்-டாப் பாக்ஸ்

டாடா ஸ்கை பிங்+ செட்-டாப் பாக்ஸ்

டாடா ஸ்கை பிங்+ செட்-டாப் பாக்ஸ் ஸ்மார்ட் டிவிகள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் என அனைத்திலும் திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்க அனுமதிக்கிறது. க்ரோம் காஸ்ட் மற்றும் கூகிள் அசிஸ்டென்ட் அம்சமும் இந்த செட் டாப் பாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. செட்-டாப் பாக்ஸ் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கேம்கள் மற்றும் செயலிகளுக்கான அணுகலை வழங்குகிறது. செட்-டாப் பாக்ஸின் விலை ரூ.3,999.

அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்

அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்

அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் லைவ் தொலைக்காட்சி சேவையாகும். எம்டிவி பீட்ஸ் ஹெச்டி, சோனி பிபிசி எர்த் ஹெச்டி, கலர்ஸ் ஹெச்டி, நிக் எச்டி+, டிடி நேஷனல், டிஸ்கவரி, ஜீடிவி, ஜீசினிமா, ஜீநியூஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் சேவை வழங்கப்படுகிறது. அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் எச்.டி.எம்.ஐ போர்ட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Here the Tips How to Convert Normal Tv into a Smart Tv

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X