சத்தம் போடாமல் வேலை பார்க்கும் ஜியோ; முடிகிறது ஏர்டெல் டிவி, டாடா ஸ்கை சகாப்தம்.!

இந்திய டெலிகாம் துறையில் ஒரு பெரிய புரட்சியையே உருவாக்கிய பிறகு, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 4ஜி லேப்டாப்பை வெளியிடும் என்கிற தகவல் வெளியானது.

|

இந்திய டெலிகாம் துறையில் ஒரு பெரிய புரட்சியையே உருவாக்கிய பிறகு, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 4ஜி லேப்டாப்பை வெளியிடும் என்கிற தகவல் வெளியானது. ஆனால் அம்பானியிடம் வேறு சில திட்டங்கள் உள்ளன என்பது போல் தெரிகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிடிஎச் சேவையானது எப்படி வேலை செய்யும்.? என்னென்னெ அம்சங்களை கொண்டிருக்கும்.? ஜியோ டிடிஎச் சேவை வெளியான பின்னர் இந்திய பயனர்களின் டிவி பார்க்கும் அனுபவம் எப்படி மாறும்.? என்பதை பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதர டிடிஎச் நிறுவனங்கள் ஒரு வழியாகி விடும்.!

இதர டிடிஎச் நிறுவனங்கள் ஒரு வழியாகி விடும்.!

4-ஜி வயர்லெஸ் சேவைகளுக்கான பான்-இந்தியா உரிமம் மற்றும் ஸ்பெக்ட்ரம் உரிமம் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனமானது, ஆண்ட்ராய்டு அடிப்படையிலான செட்-டாப்-பாக்ஸை அறிமுகம் செய்தால் இந்திய டிடிஎச் துறையில் பணம் பார்த்து கொண்டிருக்கும் இதர டிடிஎச் நிறுவனங்களான டாடா ஸ்கை, டிஷ் டிவி, ஏர்டெல் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பது உறுதி.

டாப் பாக்ஸ்கள் ஆண்ட்ராய்டு கொண்டு இயக்கப்படும்.!

டாப் பாக்ஸ்கள் ஆண்ட்ராய்டு கொண்டு இயக்கப்படும்.!

இது நாள் வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஜியோ டிடிஎச் சேவையானது, செட் டாப் பாக்ஸ்களை வழங்குவதோடு மட்டுமில்லாமல், அவை பிராட்பேண்ட் மற்றும் டிவி சேவைகளையும் வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு கூறியதுபோல், ஜியோ செட் டாப் பாக்ஸ்கள் ஆண்ட்ராய்டு கொண்டு இயக்கப்படும்.

கூகுள் பிளே சேவைகள், கேம்ஸ் மற்றும் ஆப்ஸ்கள்.!

கூகுள் பிளே சேவைகள், கேம்ஸ் மற்றும் ஆப்ஸ்கள்.!

ஆண்ட்ராய்டு கொண்டு சக்தியூட்டப்படும் என்பது உண்மையாகும் பட்சத்தில், ஜியோ டிடிஎச் சேவையானது கூகுள் பிளே சேவைகள் மற்றும் சில முன் நிறுவப்பட்ட கேம்ஸ் மற்றும் ஆப்ஸ்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்று அர்த்தம்.

ஒரு வயர் வழியாக பயனரின் வீட்டுடன் இணைக்கப்படும்.!

ஒரு வயர் வழியாக பயனரின் வீட்டுடன் இணைக்கப்படும்.!

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய எஸ்டிபி (செட் டாப் பாக்ஸ்) சேவை எவ்வாறு செயல்படும் என்று கேட்டால் - ஜியோவின் நெருங்கிய கோபுரத்துடன் கஸ்டமர் பிரிமீஸ் எக்யூப்மென்ட் (customer premise equipment) இணைக்கப்படும். பின்னர் ஒரு வயர் வழியாக பயனரின் வீடு மற்றும் கஸ்டமர் பிரிமீஸ் எக்யூப்மென்ட் இணைக்கப்படும். இந்த வலையமைப்பு லைவ் டிவி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை அடைய எஸ்டிபி (செட் டாப் பாக்ஸ்) உடன் இணைக்கப்படும்.

ஆரம்பத்தில் 300+ சேனல்கள்.!

ஆரம்பத்தில் 300+ சேனல்கள்.!

சிபிஇ (கஸ்டமர் பிரிமீஸ் எக்யூப்மென்ட்) இணைப்பு தவிர, குறைவான சிக்னல் வலிமை கொண்ட இடங்களை, ஜியோ அதன் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்கை (FTTH) கொண்டு இணைக்க திட்டமிட்டுள்ளது. இவ்வண்ணம், இந்தியா முழுக்க ஜியோ லைவ் டிவி சேவையின் கீழ் ஆரம்பத்தில் 300+ சேனல்களும், பின்னர் இன்னும் பல சேனல்களும் இணைக்கப்பெறும்.

நிகழ்ச்சியை பதிவு செய்யும் வேலையை குறைக்கும்.!

நிகழ்ச்சியை பதிவு செய்யும் வேலையை குறைக்கும்.!

வரவிருக்கும் ஜியோ எஸ்டிபி-யில், கவர்ந்திழுக்கும் அம்சம் ஒன்றும் இடம்பெற்று இருப்பதாகக் கூறப்படுகிறது. 'கேட்ச் அப்' என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட அம்சமானது, கடந்த ஏழு நாட்களில், நீங்கள் தொடர்ச்சியாக காணும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்காணிக்கும். இது உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை பதிவு செய்யும் வேலையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

டிவியில் பாஸ் ஸ்மார்ட்போனில் பிளே.!

டிவியில் பாஸ் ஸ்மார்ட்போனில் பிளே.!

ஜியோ டிடிஎச் சேவையின் கீழ், கவனிக்கத்தக்க மற்றொரு அம்சமும் உள்ளது. அதன் கீழ், குறிப்பிட்ட நிகழ்ச்சியை டிவியில் பாஸ் செய்து விட்டு வேறொரு சாதனத்தின் அதை பிளே செய்தும் காண முடியும். இதை ஜியோ எப்படி சாத்தியப்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது வரையிலாக, ஜியோ டிடிஎச் ​​சேவையின் தொடக்கம், சேவைகள் மற்றும் கட்டண விவரங்கள் பற்றிய எந்தவொரு அதிகாரபூர்வமான வார்த்தைகளும் வெளியாகவில்லை என்பதும், கடந்த மார்ச் 17-ஆம் தேதி டிடிஎச் சேவை சார்ந்த பணிகளில் ஜியோ நிறுவனம் ஈடுபடவே இல்லை என்கிற தகவல் வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Here’s How Reliance Jio is Going to Change the Tv Viewing Experience for Users in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X