2016-ஆம் ஆண்டில் 'வெளிப்படையாகவே' பல்ப் வாங்கிய ஸ்மார்ட்போன்கள்.!

2016-ஆம் ஆண்டை ஸ்மார்ட்போன் துறையின் மிக மோசமான ஆண்டாகவே கருதலாம். அதை நிரூபிக்கும் ஒரு சில ஸ்மார்ட்போன்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன, இதை நிச்சயமாக நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

|

இந்த 2016-ஆம் ஆண்டை ஸ்மார்ட்போன் துறையின் மிக ஏமாற்றமான ஆண்டு என்றே கூறலாம். அது புத்தம் புதிய ஸ்மார்ட்போன் சரி, அல்லது மாபெரும் முன்னணி நிறுவனமாக இருப்பினும் சரி, எதுவுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும்.

உடன் 2016-ல் பல புதிய பிராண்ட்கள் இந்திய சந்தையில் நுழைந்து நல்ல மற்றும் மோசமான என இரண்டு வகையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. மறுமுனையில், தவறான பேட்டரி அல்லது பல்வேறு வன்பொருள் அல்லது மென்பொருள் பிழைகள் காரணமாக பல ஹைஎண்ட் தொலைபேசிகள் இந்த ஆண்டின் தலைப்பு செய்திகளாகின.

மேலும் 2016-ஆம் ஆண்டின் வீழ்ச்சிக்கு இன்னொரு முக்கிய அம்சமாக எண்ணிற் அடங்காத பேட்டரி வெடிப்புகள் சம்பவங்கள் காரணமாக உள்ளது. அப்படியாக இங்கே தொகுப்பட்டுள்ள சில ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் காதலர்களையும் ஏமாற்றம் அடைய செய்த கருவிகள் என்பதை நீங்கள் நிச்சயமாக எங்களுடன் ஒப்புக்கொள்வீர்கள்.

சாம்சங் கேலக்ஸி நோட் 7

சாம்சங் கேலக்ஸி நோட் 7

இந்த ஆண்டின் மிகவும் ஏமாற்றத்தை ஸ்மார்ட்போன்களில் முதல் இடம் இதற்கே. உலகம் முழுவதிலும் விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கபப்டும் அளவு பேட்டரி வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது. உடன் சாம்சங் கேலக்ஸி என்றாலே வெடிக்குமோ என்ற பயத்தை உண்டாக்கும் அளவு மோசமான ஏமாற்றதை அளித்தது இக்கருவி. அனைத்திற்கும் மேலாக சாம்சங் என்ற ஒரு பிராண்ட் பெயரையே காலி செய்தது என்றே கூறலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்

ஒரு தரமான ஸ்டைலான தோற்றம் கொண்ட, இந்த சோனி ஸ்மார்ட்போன் பின்புற கேமிரா 5 ஆக்சிஸ் வீடியே தொழில்நுட்பம், சென்சார் இமேஜிங் தொழில்நுட்பம் மேலும் உட்பட பல்வேறு கண் கவர்ச்சியுள்ள அம்சங்களை உள்ளடக்கியது. இருப்பினும் இந்த தோல்விகள் பட்டியலில் இது இடம் பெற காரணம் அதன் விலை - ரூ.51,990/-.!

கூகுள் பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல்

கூகுள் பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் நிச்சயமாக கூகிள் பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் கருவிகளுக்கு இடமுண்டு. இதன் அறிமுகம் மற்ற மொபைல் உற்பத்தியாளர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்தது, ஆனால் அது நீடிக்கவில்லை. இந்த தொலைபேசிகளில் பின்னடைவாக இதன் விலை திகழ்கிறது - ரூ.76,000.!

ஆப்பிள் ஐபோன் 7

ஆப்பிள் ஐபோன் 7

யானைக்கும் அடி சறுக்கும். ஐபோன் 7 கருவியும் இந்த துரதிர்ஷ்டமான கருவிகளில் ஒன்றாகும். அதற்கு காரணம் சாம்சங் கேலக்ஸி நோட் 7 பேட்டரி வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு அதை தொடர்ந்தது ஐபோன் 7 கருவிகள் தான். அதுமட்டுமின்றி ஆப்பிள் ரசிகர்கள் நிச்சயம் ஐபோன் 7 கருவியில் ஒரு கடுமையான மாற்றம் எதிர்பார்க்கப்பார்த்தனர் எனினும், இரட்டை கேமிரா அம்சம் தவிர வேறு எந்த அம்சமும் பயனர்களை கவரவில்லை.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்

எக்ஸ் தொடறில் இருந்து அதன் இசெட் தொடருக்கு நகரும் சோனி, இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதன் தலைமை எக்ஸ்பீரியா எக்ஸ் கருவியை அறிமுகம் செய்தது. ஸ்னாப்டிராகன் 650 எஸ்ஓசி மூலம் இயங்கும் அக்கருவி ஒரு 23 எம்பி கேமரா கொண்டிருந்தது. இருப்பினும் அதன் தோல்விக்கு காரணம் வழக்கமான அதன் அதிகப்படியான விலை நிர்ணயம் தான் - ரூ.50,000/-..!

மேலும் படிக்க

மேலும் படிக்க

அப்பாடா.. ஆர்வமுடன் எதிர்பார்த்த ஐபோன் 8 லீக்ஸ் தகவல்கள், வெளியானது.!

Best Mobiles in India

Read more about:
English summary
Here Are Few Smartphone Flops of 2016 That You Would Definitely Agree. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X