தீபாவளி முடிந்ததும் வேலையை காட்டிய Apple! இனி எக்ஸ்ட்ரா ரூ.6000 கொடுத்தா தான் iPhone!

|

"அவ்வளவு தான்.. தீபாவளிலாம் முடிஞ்சு போச்சு.. போயி அவங்க அவங்க வேலைய பாருங்க!" என்கிற பாணியில் அமெரிக்க நிறுவனம் ஒரு காரியத்தை செய்துள்ளது!

அது வேற யாரும் இல்ல - ஆப்பிள் நிறுவனம் (Apple) தான்! ஆப்பிள் அப்படி என்ன செய்தது? இதனால் ஆப்பிள் தயாரிப்புகளை வாங்க விரும்புவோர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சத்தமில்லாமல் ஆப்பிள் பார்த்த வேலை!

சத்தமில்லாமல் ஆப்பிள் பார்த்த வேலை!

இந்நேரம், ஆப்பிள் அப்படி என்ன செய்து இருக்கும் என்பதை உங்களில் சிலர் யூகித்து இருக்கலாம்!

தீபாவளி சலுகை என்கிற பெயரின் கீழ், லேட்டஸ்ட் ஐபோன்கள் உட்பட பெரும்பாலான ஆப்பிள் டிவைஸ்களின் மீது சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாரிவாரி வழங்கிய ஆப்பிள் நிறுவனம் தற்போது சத்தம் போடாமல் அதன் பலவகையான தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தி உள்ளது!

மனச தேத்திக்கோங்க.. பூமியில் அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்!மனச தேத்திக்கோங்க.. பூமியில் அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்!

கொஞ்சம் நஞ்சம் இல்ல.. 6000 ரூபாய் வரை!

கொஞ்சம் நஞ்சம் இல்ல.. 6000 ரூபாய் வரை!

ஐபோன்கள் தொடங்கி ஏர் டேக் வரையிலாக, மொத்தம் 11 ஆப்பிள் தயாரிப்புகள் மீது விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் இந்த சமீபத்திய விலை உயர்வானது ரூ.300 முதல் ரூ.6000 வரை நீள்கிறது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த ஆப்பிள் தயாரிப்புகள் மீது விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது? அவைகளின் பழைய விலை மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? என்கிற பட்டியல் இதோ:

01. ஆப்பிள் ஐபேட் மினி - ரூ.3,000 விலை உயர்வு

01. ஆப்பிள் ஐபேட் மினி - ரூ.3,000 விலை உயர்வு

ஐபாட் மினி - நீங்கள் வாங்கக்கூடிய ஒரு மிகச்சிறிய ஐபாட் ஆகும். ஐபேட் மினி ரூ.46,900 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ரூ.49,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை "உருக்கும்" புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

02. ஆப்பிள் ஐபேட் ஏர் நவ் - ரூ.5,000 விலை உயர்வு

02. ஆப்பிள் ஐபேட் ஏர் நவ் - ரூ.5,000 விலை உயர்வு

ஆப்பிள் நிறுவனம், எம்1 சிப் கொண்ட அதன் ஐபேட் ஏர்-ஐ இந்த ஆண்டு தான் அறிமுகம் செய்தது. அது ரூ.54,900 என்கிற ஆரம்ப விலையில் வெளியானது. தற்போது ரூ.59,900 முதல் வாங்க கிடைக்கிறது!

03. ஆப்பிள் ஐபேட் (9th-gen) - ரூ. 3,000 விலை உயர்வு

03. ஆப்பிள் ஐபேட் (9th-gen) - ரூ. 3,000 விலை உயர்வு

9த் ஜென் ஆப்பிள் ஐபேட்டின் பேஸிக் வேரியண்ட் ஆனது ரூ.3,000 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளது. தற்போது இது ரூ.33,900 முதல் வாங்க கிடைக்கிறது.

04. ஐபோன் SE (2022) - ரூ.6,000 விலை உயர்வு

04. ஐபோன் SE (2022) - ரூ.6,000 விலை உயர்வு

ஐபோன் SE 3 மாடலின் 64ஜிபி வேரியண்ட்டின் விலை இப்போது ரூ.49,900 ஆகும், அதே சமயம் இதே மாடலின் 128ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.54,900 க்கும் மற்றும் 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.64,900 க்கும் வாங்க கிடைக்கிறது.

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

05. ஆப்பிள் ஏர்டேக் - ரூ.300 விலை உயர்வு

05. ஆப்பிள் ஏர்டேக் - ரூ.300 விலை உயர்வு

ஆப்பிளின் ட்ராக்கிங் டிவைஸ் ஆன - ஏர்டேக் (சிங்கிள் பீஸ்) இப்போது அதன் வெளியீட்டு விலையை விட ரூ.300 அதிகமாகி உள்ளது. இப்போது இது ரூ.3,490 க்கு வாங்க கிடைக்கிறது.

06. ஆப்பிள் ஏர்டேக் (நான்கு பேக்) - ரூ.1,000 விலை உயர்வு

06. ஆப்பிள் ஏர்டேக் (நான்கு பேக்) - ரூ.1,000 விலை உயர்வு

ஆப்பிளின் இந்த சமீபத்திய விலை உயர்விற்கு பின்னர், ரூ.10,900 க்கு வாங்க கிடைத்த நான்கு AirTags-களை கொண்ட பேக் இப்போது ரூ.11,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

07. ஆப்பிள் வாட்ச் பேண்ட் சோலோ லூப் - ரூ.600 விலை உயர்வு

07. ஆப்பிள் வாட்ச் பேண்ட் சோலோ லூப் - ரூ.600 விலை உயர்வு

முன்னதாக சோலோ லூப் பேண்டுகளின் விலை ரூ.3,900 ஆக இருந்தது, ஆனால் இப்போது ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

08. ஆப்பிள் வாட்ச் பிரைடட் லூப் பேண்ட் - ரூ.1,600 விலை உயர்வு

08. ஆப்பிள் வாட்ச் பிரைடட் லூப் பேண்ட் - ரூ.1,600 விலை உயர்வு

ரெயின்ஃபாரெஸ்ட், ஸ்லேட் ப்ளூ, ப்ராடெக்ட் (ரெட்), பீஜ், மிட்நைட், பிளாக் யூனிட்டி மற்றும் ப்ரைட் எடிஷன் போன்ற வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும் பிரைடட் லூப் பேண்ட்டின் விலை இப்போது ரூ.9,500 ஆக அதிகரித்துள்ளது.

09. ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் லூப் பேண்டுகள் - ரூ.600 விலை உயர்வு

09. ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் லூப் பேண்டுகள் - ரூ.600 விலை உயர்வு

முன்பு ரூ.3,900 க்கு வாங்க கிடைத்த இந்த இரண்டு பேண்டுகளின் விலையும் இப்போது ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

10. ஆப்பிள் வாட்ச் நைக் பேண்ட்ஸ் - ரூ.600 விலை உயர்வு

10. ஆப்பிள் வாட்ச் நைக் பேண்ட்ஸ் - ரூ.600 விலை உயர்வு

'ரெகுலர்' ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் லூப் பேண்ட்களை போலவே, நைக் வேரியண்ட்களின் விலையும் இப்போது ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

11. ஆப்பிள் வாட்ச் லெதர் பேண்ட் - ரூ.1,600 விலை உயர்வு

11. ஆப்பிள் வாட்ச் லெதர் பேண்ட் - ரூ.1,600 விலை உயர்வு

ஆப்பிளின் லெதர் பேண்ட் ஆனது ரூ.1,600 என்கிற விலை உயர்வு பெற்றுள்ளது. இப்போது இது ரூ.9,500 க்கு வாங்க கிடைக்கிறது. இதை நீங்கள் Umber, Ink, Midnight, Umber Modern, Ink Modern மற்றும் Azure Modern என்கிற வண்ண விருப்பங்களின் கீழ் வாங்கலாம்!

Best Mobiles in India

English summary
Apple silently increased the prices of 11 products in India including iPhone SE 2022 AirTag

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X