Just In
- 3 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 7 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 7 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 9 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
போச்சே.. நைஸாக வந்து சைஸாக நெக்லஸை திருடி சென்ற எலி.. பதறிய நகைக்கடை..ஐபிஎஸ் அதிகாரி ஷாக் வீடியோ
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. முக்கியக் கூட்டாளி டோட்டல் எனர்ஜிஸ் அறிக்கை..!
- Movies
என்ன சொல்றீங்க.. கடைசி நேரத்தில் தள்ளிப் போனதா ஷங்கர் பட ஹீரோயின் திருமணம்.. ஷாக்கான ரசிகர்கள்!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2023 கோவிட் அச்சம்: வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய ஹெல்த் கேட்ஜெட்ஸ்.! தவற விட்டுவிடாதீர்கள்.!
2022ல கொரோனா தொற்று எப்போ ஆரம்பிச்சிதோ அப்போல இருந்து அனைவரது வீட்டுலயும் ஒரு மினி மருந்துக்கடையே இருக்கும்னு சொல்லலாம். பதட்டத்துல பலர் தேவையில்லாத பொருட்களை எல்லாம் கூட வாங்கி வைத்தனர். உயிர் மேல அவ்வளவு பயம் மனுஷனுக்கு. நகைச்சுவையை ஒத்தி வைத்துட்டு பார்த்தா எந்த ஒரு நோயையும் ஆரம்ப நிலையிலே கண்டறிந்தா அதுவே பாதிப் பிரச்சனையைத் தீர்த்திடும். அது, கொரோனா தொற்று, சமீபத்துல அதிகரித்து வரும் B.F.7 தொற்றுணு எல்லாத்தூக்குமே பொருந்தும்.

இந்த 2023-ல் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய ஹெல்த் கேட்ஜெட்ஸ்கள்.!
பிரத்தியேகமான பரிசோதனைகளின் முடிவுகள் வர தாமதமாகும் சமயங்கள்ல வீட்டு ஒரு சில கருவிகள் இருந்தா கொரோனா தொற்று இருக்குமா? இருக்காதா? என்பது பற்றி ஓரளவு யூகம் செய்ய அந்தச் சில கருவிகள் உதவு செய்யும். அந்த வகையில கொரோனா தொற்று சமயத்துல அனைத்து வீடுகள்-லயும் கட்டாயம் இருக்க வேண்டிய Health gadget-கள் என்னணு பார்க்கலாம் வாங்க.

பள்ஸ் ஆக்ஸி மீட்டர் (Pulse Oximeter)
சாதாரணக் காய்ச்சலுக்கும் கொரோனா தொற்றுக்கும் இடையே இருக்கும் முக்கிய வித்தியாசமாகச் சொல்லப்படுவது, கொரோனா தொற்று மூலம் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறையும் என்பது - அந்த வகையில் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவை கண்டறியும் ஒரு கருவி கையுடன் இருந்தால் அது மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று. இதற்காக உங்களுடன் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான டிவைஸ் தான் பள்ஸ் ஆக்சிமீட்டர்.

இந்த ஆக்சிமீட்டர் எப்படி செயல்படுகிறது தெரியுமா?
இந்தக் கருவி ரத்தத்தில் எவ்வளவு ஆக்சிஜன் அளவு அதாவது SPO2 இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொல்லும். பொதுவாக ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் (Haemoglobin) உடலுக்கு ஆக்சிஜனை சுமந்து செல்லும். பள்ஸ் ஆக்ஸிமீட்டரை விரல்களின் நுனியில் அல்லது காது மடல்களில் மாட்டும்போது அது சிவப்பு மற்றும் அகச்சிவப்பு (Infrared) என்று இரண்டு விதமான ஒளிகளை வெளியிடும். ஆக்சிஜன் அதிகமாக இருந்தால் அகச்சிவப்பு ஒளி அதிகமாக உள்வாங்கப்பட்டுச் சிவப்பு ஒளியை வெளியே கடந்து செல்லும்.

எந்த ஆக்சிமீட்டர் ரீடிங் பாதுகாப்பானது? இது தான் வேல்யூ.!
அதுவே, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தால் சிவப்பு ஒளி உள்வாங்கப்பட்டு அகச்சிவப்பு வெளியே கடந்து செல்லும். இதை வைத்து ரத்தத்தில் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கிறது என்பதனை சதவிகிதமாகப் பள்ஸ் ஆக்சிமீட்டர் திரையில் காட்டும். ஆரோக்கியமான மனிதனுக்கு ரத்தத்தில் 95 முதல் 100% வரை ஆக்சிஜன் அளவு இருக்கும்.

எந்த ஆக்சிமீட்டர் ரீடிங் குறைந்தால் மருத்துவரை நாட வேண்டும்.!
அதற்குக் கீழாக ஆக்ஸிஜன் அளவு காட்டப்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம். கொரோனா தொற்று ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை குறைக்கும் என்பதனால் இந்தக் கருவி வீட்டில் இருக்கும்பொழுது உடல் நிலையின் தன்மையை அறிந்து அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கலாம்.

இன்ப்ராரெட் தெர்மோமீட்டர் (Infrared Thermometer)
கொரோனா தொற்றுக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று தனிமனித இடைவெளி. கொரோனா ஒரு விதமான காய்ச்சல் என்பதால தொற்று இருப்பவருக்கு வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதனை அவ்வப்போது கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிப்பது அவசியம்.

ஏன் இந்த தெர்மோமீட்டர் மிக முக்கியமானது தெரியுமா?
ஆனால் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அருகில் சென்று ஒவ்வொரு முறை வெப்பநிலையைச் செக் செய்தால் உதவி செய்பவருக்கும் தொற்று பரவும் ஆபத்து உள்ளது. அதைத் தவிர்ப்பதற்கு ஏற்ற ஒரு கருவி தான் இன்ஃப்ரா-ரெட் தெர்மோமீட்டர். இந்தத் தெர்மோ மீட்டரை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்தே ஒருவருக்கு எவ்வளவு வெப்பநிலை இருக்கிறது என்பதனை கண்டறிய முடியும்.

யூவி சானிடைர்சர் மற்றும் லேம்ப்ஸ் (UV Sanitizer and Lamps)
வேலை காரணமாகவோ, பொருட்களை வாங்குவதற்காகவோ வெளியில் சென்று வருபவர்களிடம் இருந்து வீட்டில் இருப்பவர்களுக்குத் தொற்றுப் பரவாமல் இருக்கக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவுவது, பொருட்களை மஞ்சள் தண்ணீரில் கழுவுவது என்று சுகாதார நடவடிக்கைகளை எடுக்க அரசு வற்புறுத்தி வந்தது. ஆனால் ஃபோன் (Phone), கீ செயின் (Key Chain) மாதிரி ஈரப்படுத்த முடியாத கருவிகள் அப்படியேதான் வீட்டிற்குள் கொண்டு சென்று பயன்படுத்தப்படுகிறது.

ஏன் சானிடைஸ் செய்ய இந்த கருவிகள் முக்கியமானது?
இவற்றிலிருந்தும் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், அவற்றைச் சானிடைஸ் (Sanitize) செய்வது அவசியம்.
அதற்கான ஒரு கருவி தான் UV சானிடைசிங் மெஷின் (UV Sanitizing Machine) மற்றும் விளக்குகள். அவற்றிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) நுண்கிருமிகளைக் கொல்லும் தன்மையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தண்ணீரில் நனைக்க முடியாத மொபைல் போன் (Mobile Phone), கீ செயின் (Key Chain), ரூபாய் நோட்டுகள் மாதிரியான பொருட்களைச் சுலபமாகச் சானிடைஸ் செய்ய முடியும்.

கிருமிகளை ஸ்டெர்லைஸ் செய்ய மறக்காதீர்கள்.!
மேலும், வீட்டில் புற ஊதா கதிர்களை வெளியிடும் விளக்குகளை மாட்டி, அவ்வப்போது அதனை ஆன் செய்து வைத்தால் அறைகளில் பரவி இருக்கும் முன் கிருமிகள் கூட ஸ்டெர்லைஸ் (Sterilize) செய்யப்படும். ஆனால் இந்தப் புற ஊதா கதிர் விளக்குகளை ஆன் செய்யும்பொழுது மனிதர்கள் உள்ளே இருக்கக் கூடாது.

ஆவி-பிடிக்கும் ஸ்டீமர் கருவிகள் (Steamer)
கொரோனா நுரையீரலை அடையாத வரை தொற்று ஏற்பட்டவர் பாதுகாப்பான நிலையில்தான் இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுவர். அந்த வகையில், வெளியில் சென்று வந்தவர்கள் உடனடியாக ஆவி பிடித்தால் ஒருவேளை கொரோனா தொற்று உங்கள் நாசியில் நுழைந்து இருந்தாலும் அது இறந்துவிடும். அதன் மூலம் தொற்று நுரையீரலை அடையாமல் தவிர்க்கலாம். அதற்கு உறுதுணையாக இருக்க ஸ்டீமர் (Steamer) மாதிரியான பொருட்களை வீட்டில் வைத்து அவ்வப்போது பயன்படுத்த வேண்டும்.

இன்னம் என்னென்ன கேட்ஜெட்கள் எல்லாம் வாங்க கிடைக்கிறது?
மேலும், இருதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைச் சுலபமாகக் கண்டறிய ஸ்மார்ட் வாட்ச்களும் (Smart Watches) சமீபகாலமா சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தியும் பயனடையலாம்.
மேலே குறிப்பிட்ட கேட்ஜட்டுகளுடன் சேர்த்து டிஜிட்டல் பிளட் பிரஷர் மானிட்டர் (Digital Blood Pressure Monitor) போன்றவற்றை வாங்கிக்கொள்ளுங்கள்.

திடீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன் வாங்கிவிடுங்கள்.!
குளுக்கோ மீட்டர் (Gluocometer) மாதிரியான கருவிகளையும், தரமான மாஸ்குகளையும் (Mask), போர்ட்டபிள் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் (Portable Oxygen Cylinder) முன்னெச்சரிக்கையாக எப்போதும் வீட்டில் வைத்துக் கொள்வது அவசரக்காலத்தில் மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.
இந்த கருவிகளை இப்போதே டிமாண்ட் இல்லாத போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். திடீரென தொற்று சதவீதம் அதிகரித்துவிட்டால், இவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதை கருத்தில்கொண்டு, முன்னரே சிந்தித்து செயல்படுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470