நானோ கூலர்.. குட்டி சைஸ் தான்.. ரூமுக்கு 1 வாங்கி போடுங்க.. பட்ஜெட்ல குளுகுளு காற்று.. கூலிங் Fan விலை என்ன?
புதிதாக ஏர் கூலர் (Air cooler), ஏசி (AC), அல்லது கூலிங் ஃபேன் (Cooling Fan) வாங்க ஐடியா செய்த மக்களுக்கு ஒரு குட் நியூஸ். அதிக செலவு செய்ய முடியாத மக்களுக்காகவே இப்போது நானோ ஏர் கூலர் சாதனமொன்று அறிமுகமாகியுள்ளது.
நானோ கார் (nano car) கேள்விப்பட்டிருப்பீங்க, நானோ மவுஸ் (nano mouse) கூட கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனால், வெயில் காலத்தில் சூட்டை தணிக்கும் வகையில், புதிதாக நானோ ஏர் கூலர் (nano air cooler) சாதனம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்படவில்லை என்றால், இந்த சாதனத்தை பற்றி தற்போது தெரிந்துகொள்ளுங்கள். நானோ ஏர் கூலர் என்ற சாதனம் குளிங்க ஃபேன்னுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹவாய் நானோ பர்சனல் யூஸ் கூலிங் ஃபேன் உடன் ஷைனிங் ஏபிஎஸ் பாடி (HAVAI Nano Personal Use Cooling Fan with Shining ABS Body):
நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் சாதனம் ஹவாய் பிராண்ட் (Havai) என்ற பெயருடன் அமேசான் தளத்தில் ஹவாய் நானோ பர்சனல் யூஸ் கூலிங் ஃபேன் உடன் ஷைனிங் ஏபிஎஸ் பாடி (HAVAI Nano Personal Use Cooling Fan with Shining ABS Body) என்ற மாடல் பெயருடன் இந்த சாதனம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஹவாய் நானோ கூலிங் ஃபேன் (Havai Nano Cooling Fan) பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
இந்த புதிய குட்டி சைஸ் நானோ கூலிங் ஃபேன் (nano cooling fan) சாதனம் ஒரு சிறிய சைஸ் ஏர் கூலர் போல செயல்படுகிறது. சிறிய இடத்தில் கச்சிதமாக பொருந்தும் அமைப்பை இது கொண்டுள்ளது. பார்ப்பதற்கு சிறிதாக காட்சியளித்தாலும், இதன் வடிவமைப்பு மிகவும் உறுதியான மெட்டீரியலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பாடி அக்கரிலோனிட்ரில் புட்டடியேன் ஸ்டைரென் (Acrylonitrile Butadiene Styrene) என்ற உறுதியான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ABS பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதனால், இது எளிதில் நிறம் மாறாது மற்றும் உடையாது. இந்த ஹவாய் ஏர் கூலிங் ஃபேன் (HAVAI Air Cooling Fan) சாதனம் 3 ஸ்பீட் மோட்டார் (3 speed motor) உடன் தெர்மல் ஓவர்லோட் ப்ரோடெக்டர் (Thermal Overload Protector) அம்சத்துடன் வருகிறது. இது 5090 அடர்த்தி கொண்ட ஹனிகோம்ப் பேட்ஸ் கொண்ட ஃப்ளுட் பேப்பர் ஆதாரத்துடன் வருகிறது.

நானோ கூலர்.. குட்டி சைஸ் தான்.. ரூமுக்கு 1 வாங்கி போடுங்க.. விலை என்ன?
இந்த அழகான குட்டி ஏர் கூலர் (small air cooler) சாதனத்திற்குள்ளே தண்ணீர் மற்றும் ஐஸ் கியூப்ஸ்களை (ice cubes) பயன்படுத்த இந்த சாதனம் ஆதரிக்கிறது. இந்த நானோ ஏர் கூலர் சாதனம் 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய வாட்டர் டேங்க்கை (7 liter water tank) கொண்டுள்ளது. இதன் மேற்பகுதியில், ஐஸ் பாக்ஸ் உடன் வாட்டர் இன்லெட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது 4 அடி தூரம் வரை சில் காற்றை வீசுகிறது. அதேபோல், இந்த மினி ஏர் கூலர் (Mini air cooler) சாதனம் 3 பின் பிளக் உடன் வருகிறது. ட்ரிபிள் பின் பயன்படுத்தும் பொழுது, இந்த சாதனத்தின் பிளக் கலராமல் கச்சிதமாக பொருந்துகிறது. இந்த சாதனம் அமேசான் (Amazon) தளத்தில் ரூ.3590 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.5,999 ஆகும்.


Click it and Unblock the Notifications








