மிரட்டலான புது வடிவத்தில் ஹர்மன் கார்டன் SoundSticks 4 ஸ்பீக்கர்ஸ் அறிமுகம்.. விலை இது தான்..
ஹர்மன் கார்டன் இந்தியாவில் அதன் ஸ்பீக்கர் போர்ட்ஃபோலியோவில் ஒரு புதிய தயாரிப்பைச் சேர்த்துள்ளது. சவுண்ட்ஸ்டிக்ஸ் 4 (SoundSticks 4) என்ற புதிய ப்ளூடூத் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியது. இந்த சவுண்ட்ஸ்டிக்ஸ் 4 ஒரு தனித்துவமான வடிவமைப்பைப் பெற்றுள்ளது. உங்களின் வீட்டின் அழகை அதிகப்படுத்தும் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஹர்மன் கார்டன் சவுண்ட்ஸ்டிக்ஸ் 4 ப்ளூடூத் ஸ்பீக்கர்
ஹர்மன் கார்டன் சவுண்ட்ஸ்டிக்ஸ் 4 ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நிறுவனத்தின் சொந்த வலைத்தளங்களில் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. சவுண்ட்ஸ்டிக்ஸ் 4 சாதனம் ட்ரான்ஸ்பரென்ட் வடிவத்தில் இரண்டு சாட்டிலைட் ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

100 வாட் டோம் சப்வூபர்
இதன் சப்வூபர் கவர் இன்னர் ரிப்பில்ட் சர்பேஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 100 வாட் டோம் சப்வூபர் துடிப்பான ட்ரெபிள் மற்றும் பாஸை வழங்குகிறது. அதே நேரத்தில் இரண்டு சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் தலா நான்கு டிரைவர்களைக் கொண்ட தெளிவான அறை நிரப்பும் துடிப்பான சவுண்டை வெளியிடுகின்றது. இது புளூடூத் 4.2 வழியாக வயர்லெஸ் புளூடூத் ஸ்ட்ரீமிங்கிற்கான ஆதரவையும் வழங்குகிறது.

சாட்டிலைட் ஸ்பீக்கர்ஸ்
பல ஆண்டுகளாக நிகரற்ற அழகையும் நேர்த்தியையும் அனுபவித்து வரும் எங்கள் நுகர்வோரின் வாழ்க்கையில் ஹர்மன் கார்டன் சவுண்ட்ஸ்டிக்ஸ் 4 ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. எங்கள் ஸ்பீக்கர்களின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதன் அதிர்ச்சியூட்டும் வடிவமைப்பு மட்டுமல்லாமல் இதன் அசாதாரணமான ஆடியோ அனுபவமும் வேறு லெவலில் உள்ளது என்று ஹர்மன் இந்தியாவின் துணைத் தலைவர் விக்ரம் கெர் கூறியுள்ளார்.

விலை என்ன தெரியுமா?
புதிய சவுண்ட்ஸ்டிக்ஸ் 4 ப்ளூடூத் ஸ்பீக்கர் சிறந்த ஆடியோ மற்றும் பொறியியலின் உருமாறும் அழகை உண்மையாகக் கொண்டுள்ளது. இந்த புதிய சவுண்ட்ஸ்டிக்ஸ் 4 ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் வெறும் ரூ.25,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் டிசைனில் மிரட்டலான ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இதை உடனே வாங்கலாம்.


Click it and Unblock the Notifications