ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. ஆஃபரில் Haier 4K டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஹையர் W400UG 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ஹையர் W400UG 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஹையர் W400UG 43 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (Haier W400UG 43 inch 4K Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹையர் W400UG 43 இன்ச் டிவி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 (HDR10), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), 300 நிட்ஸ் பிரைட்னஸ், உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் தரமான பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. மேலும் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியும் ஹையர் W400UG 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 மாடலில் உள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த 43 இன்ச் ஹையர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
ஹையர் W400UG 43 இன்ச் 4கே கூகுள் டிவி மாடலில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஹையர் டிவியில் உள்ளன.

தனித்துவமான டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் ஹையர் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது. இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது. ஆகவே இந்த ஹையர் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவி உடன் வருகிறது.
ஹையர் W400UG 43 இன்ச் 4கே கூகுள் டிவி மாடல் மேம்பட்ட அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஹையர் நிறுவனம்.


Click it and Unblock the Notifications