Home
Gadgets

அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. ஆஃபரில் ஹையர் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது ஹையர் W400UG 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் ஹையர் W400UG 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.23,990 விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் ஹையர் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

ஹையர் W400UG 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 அம்சங்கள் (Haier W400UG 43 inch 4K Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹையர் டிவி வெளிவந்தது. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 (HDR10), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), 300 நிட்ஸ் பிரைட்னஸ், உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் தரமான பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. மேலும் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியும் ஹையர் W400UG 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 மாடலில் உள்ளது.

அதுவும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த 43 இன்ச் ஹையர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

ஹையர் W400UG 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 மாடலில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஹையர் டிவியில் உள்ளன.

அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் ஹையர் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் ஹையர் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது. ஆகவே இந்த ஹையர் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவி உடன் வருகிறது.

இந்த ஹையர் W400UG 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 மாடலில் அனைத்து சிறப்பான அம்சங்களும் உள்ளன. ஆகவே அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹையர் டிவி மாடல் ஆனது கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

photo credits: croma

More from GizBot

Best Mobiles in India

English summary
Haier W400UG 43 inch 4K Smart Google TV 2025 available at 29 percent discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X