Home
Gadgets

மிரட்டலான அம்சங்களுடன் 2 ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Haier.! வியக்கவைக்கும் விலை.!

ஹையர் (Haier) நிறுவனம் சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டியாக அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஹையர் நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அதிநவீன வசதிகளுடன் இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்தவதால் அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ஹையர் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அதாவது Haier S9QT 55-இன்ச் மற்றும் 65-இன்ச் 4கே கியூஎல்இடி (QLED) ஸ்மார்ட் டிவிகளை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஹையர் நிறுவனம். இந்த இரண்டு டிவிகளும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Haier.!

அதாவது ஹையர் அறிமுகம் செய்துள்ளது இந்த 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 4கே எச்டிஆர் ஆதரவு, 3840*2160 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளன. அதேபோல் படத்தின் தரத்தை மேம்படுத்த உயர் கான்ட்ராஸ்ட் ரேஷியோ, லோக்கல் டிமிங் மற்றும் MEMC 120Hz போன்ற பல அம்சங்களையும் கொண்டுள்ளன இந்த புதிய ஹையர் டிவிகள்.

குறிப்பாக டால்பி விஷன் ஐக்யூ, ஹை டைனமிக் ரேஞ்ச் (எச்டிஆர்) உள்ளிட்ட சிறப்பான வசதிகளுடன் இந்த ஹையர் S9QT 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. பின்பு இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹையர் நிறுவனம். குறிப்பாக இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.

குவாட்-கோர் ARM CA73 CPU ஆதரவுடன் இந்த புதிய ஹையர் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டு இந்த 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Haier.!

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஹையர் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் குரோம்காஸ்ட் பில்ட்-இன், ஒன் டச் பட்டன், dbx-tv, கூகுள் அசிஸ்டண்ட், புளூடூத் வாய்ஸ் ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹையர் ஸ்மார்ட் டிவிகள்.

ஆட்டோமேட்டிக் வால்யூம் கண்ட்ரோல், மொபைல் ரிமோட் ஆப், எனர்ஜி சேவிங் மோடு போன்ற சிறப்பான அம்சங்களுடன் ஹையர் S9QT 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. இதுதவிர கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகள் பல சிறப்பான அம்சங்களையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹையர் S9QT 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வைஃபை 5, புளூடூத் 5.1, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Haier.!

ஹையர் S9QT 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.69,999-ஆக உள்ளது. பின்பு இதன் 65-இன்ச் மாடலின் விலை ரூ.91,900-ஆக உள்ளது. தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளையும் வாங்க முடியும். குறிப்பாக விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Haier S9QT 55-inch and 65-inch 4K QLED TVs launched in India: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X