ஹோம் தியேட்டருக்கும் மேல.. 100 இன்ச் QLED டிவி.. 55W டால்பி ஆடியோ.. 4GB ரேம்.. Google TV ஓஎஸ்.. எந்த மாடல்?
ஹோம் தியேட்டருக்கு நிகரான அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஹையர் நிறுவனத்தின் ஹையர் எஸ்90 கியூஎல்இடி 100 இன்ச் டிவி (Haier S90 QLED 100 inch TV) இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. டால்பி விஷன் ஐகியூ, டால்பி அட்மோஸ் மட்டுமல்லாமல், ஆடியோ வீடியோ பீச்சர்களில் ஏஐ மூலம் என்ஹான்ஸ் கொடுக்க ஏஐ செண்டர் மேக்ஸ் கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிவியின் விலை, விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஹையர் எஸ்90 கியூஎல்இடி 100 இன்ச் டிவி அம்சங்கள் (Haier S90 QLED 100 inch TV Specifications): இந்த டிவில் 100 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4K எச்டிஆர் ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ) கிடைக்கிறது.

இதுவொரு கேமிங் என்ஹான்ஸ்டு மாடலாக இருப்பதால், ஏஐ கேம் மோட் (AI Game Mode) கிடைக்கிறது. இதில் 244Hz ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ளலாம். மேலும், 432 டிம்மிங் சோன் (Dimming Zone) கிடைக்கிறது. மொத்தமாக டிஸ்பிளேவுக்கு ஏஐ அல்ட்ரா சென்ஸ் ப்ராசஸர் (AI Ultra Sense Processor) கிடைக்கிறது. டால்வி விஷன் மட்டுமல்லாமல், விவிட், ஸ்போர்ட், கேம், எனர்ஜி சேவிங் மோட்கள் உள்ளன.
அதேபோல கேமிங் பீச்சர்களை பார்க்கையில், வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR) மட்டுமல்லாமல், ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் ஏஎம்டி ப்ரீசிங்க் ப்ரீமியம் ப்ரோ (AMD FreeSync Premium Pro) கிடைக்கிறது. மேலும், பிரத்யேகமாக கேமிங் மெனு (Game Menu) கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக விசுவல், சவுண்ட் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க ஏஐ செண்டர் மேக்ஸ் (AI Center MAX) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த செண்டர் மூலம் ஏஐ விசுவல், ஏஐ சவுண்ட், ஏஐ கேமிங் மற்றும் ஏஐ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றில் என்ஹான்ஸ்மெண்ட்டை பார்க்க முடியும். அல்ட்ரா ஸ்லிம் மற்றும் பெசல்-லெஸ் ஃபிரேம் மட்டுமல்லாமல், அல்ட்ரா கிரிஸ்டல் பிளாக் பேனல் (Ultra Crystal Black Panel) கிடைப்பதால், சினிமாடிக் லெவல் அவுட்புட் கிடைக்கும். ஏஐபிகியூ (AIPQ) மற்றும் மீடியாடெக் டெவலப்ட் ப்ராசஸர் கிடைக்கிறது.
ஏஐபிகியூ கிடைப்பதால், ரியல் டைம் பிக்சல் குவாலிட்டி என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க ஏஐ சீன் டிடெக்சன் (AI Scene Detections), கலர் அக்கியூரசி மற்றும் ரிச்சர் பீல் கொடுக்க ஏஐ கலர் பூஸ்ட், எச்டிஆர் பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஏஐ எச்டிஆர் என்ஹான்ஸர் ப்ரோ உள்ளிட்ட டிஸ்பிளே பீச்சர்கள் இதில் கிடைக்கின்றன. மேலும், லோவ்-ரெசொலூஷன் இமேஜ்களை என்ஹான்ஸ் செய்ய ஏஐ எஸ்ஆர் (AI-SR) கிடைக்கிறது.
மேலும், ஷார்ப் வீடியோகளுக்கு ஏஐ டெப்த் மற்றும் ஃபாஸ்ட் மூவிங் சீன்களை கிளியராக கொடுக்க ஏஐ மோஷன் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இப்போது ஒட்டுமொத்த டிஸ்பிளே பீச்சர்களில் பிரீமியம் காட்டி இருக்கிறது. 2 மெயின் சேனல் மற்றும் 1 சப்வூப்பர் கொண்ட ஆடியோ சிஸ்டம் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டோட்டல் சோனிக் (Total Sonics) பீச்சர்கள் கிடைக்கின்றன.
55W ஆடியோ அவுட் பெற்று கொள்ளலாம். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொடுக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 யுஐ கிடைக்கும். ஏஐ ஸ்மார்ட் வாய்ஸ் கிடைக்கிறது.இதை கூகுள் அசிஸ்டன்ட் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கும். ஒன்-டச் பட்டன் கன்ட்ரோல் கிடைக்கும். வை-பை 6 கனெக்டிவிட்டி உள்ளது.
அதேபோல ப்ளூடூத் 5.3 மற்றும் 4 எச்டிஎம்ஐ போர்ட், 3 யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் கனெக்டிவிட்டி பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த ஹையர் எஸ்90 கியூஎல்இடி 100 இன்ச் டிவியின் விலை ரூ.3,22,990ஆக இருக்கிறது. ஹையர் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 3 வருட வாரண்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








