75 இன்ச் Haier 4K டிவி அறிமுகம்.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. விலையை சொன்னா நம்புவீங்களா?
ஹையர் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒவ்வொரு ஸமார்ட் டிவிக்கும் இந்தியாவி அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் புதிய அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஹையர்.
அதாவது ஹையர் நிறுவனம் தற்போது ஹையர் எஸ்800கியூடி 4கே கியூஎல்இ ஸ்மார்ட் டிவி சீரிஸ் (Haier S800QT 4K QLED Smart TV Series) மாடல்களை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் அளவுகளில் இந்த ஹையர் எஸ்800கியூடி சீரிஸ் வாங்க கிடைக்கும். மேலும் இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹையர் எஸ்800கியூடி 4K டிவி அம்சங்கள் (Haier S800QT 4K Smart TV specifications): குவான்டம் டாட் எல்இடி பேனல் மற்றும் 4கே ரெசல்யூஷன் கொண்டுள்ளன இந்த நான்கு புதிய ஹையர் ஸ்மார்ட் டிவிகள். மேலும் 2,160x3,840 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவிகள்.
டூயல் லைன் கேட் (DLG) டெக்னாலஜி, எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹையர் எஸ்800கியூடி கியூஎல்இ டிவி சீரிஸ். மேம்பட்ட பல புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளன இந்த புதிய ஹையர் ஸ்மார்ட் டிவிகள்.

குறிப்பாக கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி ஹையர் எஸ்800கியூடி கியூஎல்இ டிவி சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவிகளை நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த டிவிகளின் பேனலில் மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) ஆதரவும் உள்ளது. இது கான்ட்ராஸ்ட் மற்றும் ஸ்மூத்னெஸை (Smoothness) மேம்படுத்துகிறது.
கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV operating system) அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஹையர் எஸ்800கியூடி கியூஎல்இ டிவி சீரிஸ் மாடல்கள் வெளிவந்துள்ளன. எனவே பல்வேறு புதிய அம்சங்கள் இந்த டிவிகளில் கிடைக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு டிவி ஆப்ஸ் (Android TV apps) ஸ்கிரீன்காஸ்ட் (screencast)உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த டிவிகளில் உள்ளன.
டால்பி ஆடியோ சவுண்ட் டெக்னாலஜி (Dolby Audio sound technology) கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹையர் எஸ்800கியூடி கியூஎல்இ டிவி சீரிஸ் மாடல். மேலும் 2ஜபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அசத்தலான ஹையர் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஹையர் எஸ்800கியூடி கியூஎல்இ டிவி சீரிஸ் மாடல்கள் புளூடூத் வாய்ஸ் ரிமோட் கண்ட்ரோல் ஆதரவைக் கொண்டுள்ளன. மேலும் யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ
போர்ட், ஹெட்போன் அவுட்புட், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த அசத்தலான ஹையர் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
ஹையர் எஸ்800கியூடி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.38,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இதன் 55-இன்ச் டிவி 56,990 விலையிலும், 65-இன்ச் டிவி ரூ.79,990 விலையிலும், 75-இன்ச் ரூ.1,27,990 விலையிலும் விற்பனை செய்யப்படும். குறிப்பாக அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களிலும் இந்த டிவிகளை தற்போது வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications